உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் இந்திய நிறுவனங்களில் முதல் இடம் பிடித்த இந்தியன் ஆயில் கார்பேஷன்..!

உலக அளவில் வருவாய் ஈட்டும் 50 சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 7 நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன. வால்மார்ட் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ஆகியவை இவற்றில் முன்னிலை வகிக்கின்றன.

பட்டியல் வெளியீடு

அதிக வருவாய் ஈட்டும் 500 நிறுவனங்களின் பட்டியலை பர்ச்சூன் வெளியிட்டுள்ளது. இதில் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் இந்திய நிறுவனமாகக் கண்டறியப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் 53 இடங்கள் முன்னேறியுள்ளது.

வால்மார்ட் முன்னேற்றம்

சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் 65.9 பில்லியன் டாலர்களுடன் 23 சதவீத வருவாயை உயர்த்தி 137 வது இடத்தைக் கைப்பற்றியுள்ளது. கடந்த ஆண்டு 169 வது இடத்தில் இருந்தது.

ரிலையன்ஸ் வளர்ச்சி

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் 203 வது இடத்தில் இருந்து 148 வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. 2017 மற்றும் 18 ஆம் ஆண்டுகளில் 62.3 பில்லியன் வருவாயை ஈட்டியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்களுக்கு இடம்

கடந்த ஆண்டுப் பட்டியலில் கைவிடப்பட்ட இந்திய இயற்கை எரிவாயுக் கழகம் 47.5 பில்லியன் டாலர் வருவாயுடன் 197 வது இடத்தில் உள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 47.5 பில்லியன் டாலர்களுடன் 217 வது இடத்திலிருந்து 216 வது இடத்துக்கு வந்துள்ளது.

232 வது இடத்தில் டாடா

டாடா மோட்டார்ஸ் 247 வது இடத்திலிருந்து 232 வது இடத்துக்கும், பாரத் பெட்ரோலிய நிறுவன 360 வது இடத்திலிருந்து 314 வது இடத்துக்கும் முன்னேற்றம் கண்டுள்ளது. ராஜேஷ் ஏற்றுமதி நிறுவனம் 295 வது இடத்திலிருந்து 405 வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஆப்பிளுக்கு முதலிடம்

ரிலையன்ஸ் அதிகம் லாபம் ஈட்டும் நிறுவனமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் உலக அளவில் வருவாய் ஈட்டுவதில் முந்தியுள்ளதால் முதல் இடத்தைக் கைப்பற்றியுள்ளது.

சீனாவின் ஆதிக்கம்

பர்ச்சூன் பட்டியலில் சீன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. சினோக்பெக் குழுமம் 3 வது இடத்திலும், சீன தேசிய பெட்ரோலிய நிறுவனம் 4 வது இடத்திலும் உள்ளது. ஸ்டேட் கிரிட் நிறுவனத்துக்கு 2 வது இடமும், ராயல் டட்ஜ் செல்லுக்கு 5 வது இடமும் கிடைத்துள்ளது.

கணிப்பில் தகவல்

கடந்த ஆண்டுப் பர்ச்சூனில் இடம் பிடித்த 500 நிறுவனங்கள் 30 டிரில்லியன் டாலர் வருவாயும், 1.9 டாலர் டிரில்லியன் டாலர் லாபமும் ஈட்டியதாக இருந்தன. இந்த ஆண்டு 500 நிறுவனங்களில் 67.7 பில்லியன் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

Have a great day!
Read more...

English Summary

IOC tops 7 Indian firms on Fortune 500 list