ஊழியர்களின் சம்பளத்தில் 25 சதவீதம் வெட்டு - ஜெட் ஏர்வேஸ் அதிரடி.. ஊழியர்கள் விரக்தி..!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஊழியர்களின் சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக இந்தக் கடினமான முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

விட்டுக்கொடுக்கக் கோரிக்கை

ஊழியர்கள் மற்றும் விமானிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இதற்கான முடிவு அறிவிக்கப்பட்டது. தற்போது பெற்று வரும் சம்பளத்தில் 25 சதவீதத்தை விட்டுககோடுக்குமாறு நிர்வாகம் கேட்டுக்கொண்டதாகக் குட் ரிட்டன் தளத்துக்கு வந்த தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

25 விழுக்காடு சம்பள வெட்டு

ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் பெறும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் வெட்டப்படவுள்ளது. 1 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் சம்பளம் பெறும் அதிகாரிகளின் ஊதியத்திலிருந்து 25 சதவீதம் குறைக்கப்படவுள்ளது. விமானிகள் வாங்கி வரும் ஊதியத்தில் 17 விழுக்காட்டை வெட்டவும் தீர்மானித்துள்ளது.

அதிரடி நடவடிக்கை தொடக்கம்

ஜெட்ஏர்வேஸ் செயல் அதிகாரியின் ஊதியப் பிடிப்பிலிருந்து சம்பள வெட்டு நடவடிக்கை இந்த மாதத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த அதிரடி நடவடிக்கைக்குக் கால வரம்புகள் எதையும் நிர்ணயிக்காத அந்த நிறுவனம், பிடித்தம் செய்யப்பட்ட தொகை மீண்டும் வழங்கப்படுமா என்பதையும் தெளிவாக அறிவிக்கவில்லை.

சம்பள வெட்டு ஒரு முன்மாதிரி

திட்டமிட்ட வணிக இலக்குகளை எட்டுவதற்கு இந்தச் சம்பளக் குறைப்பு சரியான நடவடிக்கை என ஜெட்ஏர்வேஸ் நம்புகிறது. இந்த நடவடிக்கை மற்ற நிறுவனங்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து விளைவைகளை ஏற்படுத்தக்கூடியது.

விமானிகள் எதிர்ப்பு

நரேஷ் கோயல் தலைமையிலான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஆண்டுக்கு 3000 ஆயிரம் கோடி ரூபாயைச் சம்பளமாக வழங்கி வருகிறது. ஊதிய வெட்டு மூலம் 500 கோடி ரூபாயைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கு விமானிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மற்ற நிறுவனங்கள் ஊதிய உயர்வு அளிக்கும்போது, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சம்பள வெட்டு ஜீரணிக்க முடியாதது என்கின்றனர்.

Have a great day!
Read more...

English Summary

Jet Airways To Cut Employees Salary By Up to 25%