எஸ்பிஐ உடன் ஜியோவும் இணைந்து அடுத்த தலைமுறை வங்கி சேவை.. முகேஷ் அம்பானி அதிரடி!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வியாழக்கிழமை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ள நிலையில் ஜியோ ஜிகாஃபைபர் குறித்த அறிவிப்பாக இருக்குமோ, ஸ்மார்ட்போன் மற்றும் ஜியோ போன் ரீசார்ஜ் சலுகையாக இருக்குமோ என்றும் எதிர்பார்த்த நிலையில் அது வங்கி சேவை அறிவிப்பாக வெளியாகியுள்ளது.

எனவே இந்த அடுத்தத் தலைமுறைக்கான வங்கி சேவை குறித்த ரிலையன்ஸ் ஜியோவின் அறிவிப்பினை இங்குப் பார்க்கலாம்.

ஜியோ - எஸ்பிஐ

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து அடுத்தத் தலைமுறைக்கான வங்கிகள் சேவையினை அறிமுகம் செய்துள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகள்

ஜியோ பிரைம் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் பரிவர்த்தனையினை அதிகரிக்க உதவும்.

எஸ்பிஐ யோனோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மைஜியோ செயலியில் எஸ்பிஐ யோனோ சேவைனையும் ஒருங்கிணைத்து வழங்க உள்ளது என்று அறிவித்துள்ளனர்.

Have a great day!
Read more...

English Summary

Jio partners SBI to offer next generation banking services