தமிழ் நாட்டிற்கு ரூ.12,400 கோடி செலவில் 66 புதிய சாலைத் திட்டங்கள்!

தமிழ் நாட்டில் சென்னை சேலம் இடையில் அமைக்கப்பட உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்திற்குப் பலத்த எதிர்ப்பு நிலவை வரும் நிலையில் ரூ.12,400 கோடி செலவிலான 66 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் 2017-18 நிதியாண்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் இன்று (02.08.2018) கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் சாலைப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு. மன்சுக் எல் மாண்டவியா தெரிவித்தார்.

Advertisement

மாநிலத்தின் கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்னைக்கும்-கன்னியாகுமரிக்கும் இடையே ரூ.5,470 கோடி செலவில் 150 கி.மீ. தூரத்திற்குச் சாலை அமைப்பதற்கான 3 திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. 610 கி.மீ. நீளத்திற்குச் சாலை அமைக்கும் 4 திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அது மட்டும் இல்லாமல் சேலம் - சென்னை இடையிலான பசுமை வழிச்சாலை போன்றே மேலும் 8 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றிலும் விவசாய நிலங்கள், வீடுகள் போன்றவற்றினை மக்கள் இழக்க நேரிடும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

English Summary

NEW ROAD PROJECTS IN TAMIL NADU
Advertisement