அதிர்ச்சி! டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெட்ரோல் டீசல் வாங்க வழங்கப்பட்டு வந்த சலுகை 0.25% ஆக குறைப்பு!

பன மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 20 மாதங்களாக டிஜிட்டல் பரிவர்த்தனையில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க வழங்கப்பட்டு வந்த 0.75 சதவீத சலுகையானது 0.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

கேஷ்பேக்

பெட்ரோல் மற்றும் டீசல் வங்கும் போது டிஜிட்டல் முறையில், டெபிட், கிரெடிட் கார்டுகள் வழியாகப் பணத்தினைச் செலுத்திய மூன்று நாட்களில் கேஷ்பேக்காக இந்தச் சலுகை திருப்பி வழங்கப்படும்.

எப்போது முதல் சலுகை குறைப்பு?

எண்ணெய் நிறுவனங்கள் தற்போது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய வழங்கப்பட்டு வந்த 0.75 சதவீத சலுகையானது 0.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது என்றும் தகவல்கள் அனுப்பி வருகின்றனர்.

எவ்வளவு குறையும்?

தற்போது டிஜிட்டல் முறையில் பெட்ரோல் வாங்கும் போது லிட்டர் ஒன்றுக்கு 57 பைசாவும் டீசல் வாங்கும் போது லிட்டர் ஒன்றுக்கு 10 பைசாவும் கேஷ்பேக்காக வழங்கப்பட்ட நிலையில் அது 19 பைசா மற்றும் 17 பைசாவாகக் குறைய உள்ளது.

வாடிக்கையாளர்கள்

டிஜிட்டல் முறையில் தினமும் 4.5 கோடி வாடிக்கையாளர்கள் பெட்ரோல் மற்றும் டீசலை வாங்குவதாகவும் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு இது 40 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும் தரவுகள் கூறுகின்றன.

Have a great day!
Read more...

English Summary

Shocking, Discount cut to 0.25% on buying petrol, diesel using credit card