ஜிஎஸ்டி வரி வசூலில் இலக்கை அடையமுடியாமல் தவிக்கும் மத்திய அரசு..!

நாட்டின் முறைமுக வரி அமைப்பை முழுமையாக மாற்றிச் சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு அமலாக்கம் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட பின் இந்தியாவில் வேலைவாய்ப்புப் பாதிப்பு, வர்த்தகச் சந்தையில் தொய்வு ஏற்பட்டது.

ஆனால் மத்திய அரசு ஜிஎஸ்டி மூலம் நாட்டின் வர்த்தகம் சந்தை நிச்சயம் மேம்படும் எனத் தெரிவித்தது மட்டும் அல்லாமல் ஜிஎஸ்டி மூலம் மாதம் 1 லட்சம் கோடி ரூபாய் பெறுவோம் எனத் தெரிவித்தது.

இதன் மூலம் 2018-19ஆம் நிதியாண்டில் மத்திய அரசு ஜிஎஸ்டி மூலம் 12 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வரியை வசூல் செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இந்நிலையில் ஜூன் மாதத்தில் மத்திய அரசு ஜிஎஸ்டி வரி மூலம் 95,610 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்ட நிலையில், ஜூலை மாதத்தில் 96,483 கோடி ரூபாய் அளவிலான வரி வசூலைச் செய்துள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி இலக்கான 1 லட்சம் கோடி ரூபாய் அளவில் இருந்து வெறும் 3,500 கோடி ரூபாய் மட்டுமே குறைவாக உள்ளது. மேலும் ஜூன் மாதம் 64.69 லட்சம் பேர் வரி செலுத்தி வந்த நிலையில், ஜூலை மாதத்தில் 66 லட்சம் பேர் ஜிஎஸ்டிஆர் 3பி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர்.

ஏப்ரல் மாதத்தில் அதிகப்படியாக 1.03 லட்சம் கோடி ரூபாய் வரி வசூல் செய்திருந்த நிலையில், ஏப்ரல் மாதமே இதன் அளவு 94,016 கோடி ரூபாயாகக் குறைந்தது.

Have a great day!
Read more...

English Summary

GST collections at Rs 96,483 crore in July