ஜிஎஸ்டி கவுன்சில் 12 மற்றும் 18 ஜிஎஸ்டி விகிதங்களை 14-15 ஆக மாற்ற வாய்ப்பு: சுஷில் மோடி

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டியில் உள்ள 12 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி விகிதங்களை 14-15 சதவீமாக ஜிஎஸ்டி கவுன்சில் குறைக்க வாய்ப்புள்ளதாக மீகாரின் துணை முதலமைச்சரான சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.

அதே நேரம் இந்த வரி விகித குறைப்பானது என்று ஜிஎஸ்டி வரி வசூல் 1 டிரில்லியன் ரூபாயினை அடைகிறதோ அன்று இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வல்லுனர்கள் இந்தியாவின் ஜிஎஸ்டி வசூல் 1 டிரில்லியன் டாலராக உயர இன்ற்ரும் 9 மாதங்கள் வரை தேவைப்படும் என்று கூறுகின்றனர்.

ஜிஎஸ்டி கவுன்சில்

அன்மையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் குளிர்சாதனப் பெட்டி, வாஷிங் மெஷின் போன்ற ஆடம்பர பொருட்கள் பட்டியலில் இருந்த பல பொருட்களின் வரி விகிதம் 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி வசூல்

ஜிஎஸ்டி வசூல் ஏற்கனவே ஏப்ரல் மாதம் 1 டிரில்லியன் ரூபாயினை அடைந்து இருந்தாலும் அது ஆண்டு இறுதி கணக்கு முடிக்க வேண்டும் என்ற காரணத்தில் கிடைத்தது என்றும் ஒவ்வொரு மாதமும் மீண்டும் ஜிஎஸ்டி வசூல் 1 டிரில்லியன் டாலர் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

வல்லுனர் கருத்து

ஜிஎஸ்டி வரி விகிதங்களைக் குறைப்பது சரியான முடிவு தான் என்றும் அதனை 9 முதல் 12 மாதங்களுக்குப் பிறகு 1 டிரில்லியன் ரூபாய் வரி வசூல் ஆகும் போது செய்யலாம் என்று கேபிஎம்ஜி கூட்டாளியான ஹப்ரீத் சிங் கூறியுள்ளார்.

உலக நாடுகளில் ஜிஎஸ்டி வரி விகிதங்கள்

தற்போது உலகம் முழுவதிலும் 49 நாடுகள் 1 வரி விகித ஜிஎஸ்டி முறையும், 28 நாடுகள் 2 வரி விகித ஜிஎஸ்டியும், இந்தியா உட்பட 4 நாடுகளில் 4 வரி விகித ஜிஎஸ்டி முறையினையும் பின்பற்றி வருகின்றனர்.

Have a great day!
Read more...

English Summary

GST Council May Replace 12% And 18% Slabs With 14 to 15% As One: Sushil Modi