நுகர்வு கலாச்சாரத்தில் கைவைத்த பாஜக.. முட்டைக்கும், இறைச்சிக்கும் தடை..!

இந்தியா ஒருபோதும் சைவ உணவுகளின் நாடாக மட்டும் இருந்ததில்லை. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு அதில் பாரிய மாற்றங்களைக் கொண்டு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளன. இறைச்சி உணணும் பழக்கத்தை அடியோடு மாற்றி, காய் கறிகளை மட்டுமே விரும்பும் விலங்காக மக்கள் மாற்ற அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கின்றன. இது நுகர்வு கலாச்சாரத்தில் அச்சத்துடன் கூடிய ஒரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதைக் கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது.

முட்டைக்குத் தடை

குஜராத் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் முட்டைகளைக் கூட வெளிப்படையாக விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. சில இடங்களில் கறுப்பு பிளாஸ்டிக் பேப்பர்களில் சானிட்டரி நாப்கின்களைப் போலச் சுற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் நுகர்வோர் முட்டையும், இறைச்சியும் கிடைக்காமல் திண்டாடுகின்றனர்.

குப்பையில் கூடத் தேடல்

2008 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் சைவக்கலாச்சாரத்தைக் கொண்டு வருவதற்குக் குஜராத் பா.ஜ.க அரசு பகீரத முயற்சிகளை மேற்கொண்டன. முட்டைக்கூடுகளையும், மதுப்புட்டிகளையும் குப்பைகளில் கூடக் கிளறிப் பார்த்ததன. இந்து, ஜெயின் அல்லாத இஸ்லாமியர்கள் இடையே ஒரு பிரிவினைத் தாக்கத்தை ஏற்படுத்தி வைத்தன.

விருப்பங்களுக்குத் தடை

இஸ்லாமியர்கள் வீடுகளின் அருகில் மாமிச வாடை வருவதாகக் கூறி வாழ மறுக்கும் வரலாறும் குஜராத்தில் இருக்கிறது. இந்நிலையில் பா.ஜ.க மத்தியில் ஆட்சியைப் பிடித்ததில் தொடங்கி இன்றுவரை நுகர்வோரின் கைகள் கட்டிப் போடப்பட்டுள்ளன. உண்ணும் உணவை கூடத் தீர்மானிக்கும் அரசாக மாறி விட்ட பா.ஜ.க, உணவில் விருப்பத் தேர்வுகளுக்குத் தடை விதித்துள்ளது.

எதிர்ப்புப் பரப்புரைகள்

ஸ்வாஸ் பாரத், ஆயுஸ்மான் பாரத் என்ற பெயர்களில் இறைச்சிக்கு எதிரான முழக்கங்களை அரசே செய்கிறது. பதப்படுத்தி அடைக்கப்பட்ட பொருட்களை விட இறைச்சி உடலுக்குத் தீங்கானது எனக் கூறி வருகிறது. சைவ உணவுகளின் சிறப்புகள் பரப்பப்படுகின்றன.

நிறுவனப்படுத்த முயற்சி

சைவ உணவு சார்புடைய அரசாகப் பா.ஜ.க தன்னைக் காட்டிக் கொள்கிறது. கோமாதாக்களைக் கொண்டாடும் அவர்கள், பாபாராம் தேவின் தயாரிப்புகளை மட்டும் சந்தைப்படுத்த முயற்சிக்கிளார்கள். சைவம் என்பதை அரசாங்கள் நிறுவனப்படுத்துவது நுகர்வு கலாச்சாரத்தில் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமானத்தில் இறைச்சி உணவு நிறுத்தம்

உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் கூடுமானவரை இறைச்சி உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளன. அதிலும் குஜராத்திலிருந்து கிளம்பும் விமானங்களில் சைவம் மட்டுமே உணவாகத் தயாரிக்கப்படுகிறது. வெஜிடேரியன் இந்து உணவாகப் பரப்புரை செய்யப்படுவதாக அந்த ஆய்வுகள் கூறுகின்றன. பா.ஜ.க அரசின் இந்தக் கட்டுப்பாடுகளால் தட்டு நிறையப் பசிக்கிறது.

Have a great day!
Read more...

English Summary

Politics Of Diet By BJP