அண்ணனுக்குச் சொத்துக்களை விற்க அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம்.. குஷியில் அனில் அம்பானி!

அனில் அம்பானியின் ஆர்காம் நிறுவனம் தங்களது சொத்துக்களை முகேஷ் அமானியின் ரிலையன்ஸ் ஜியோவிற்கு விற்றுவிட்டு 2018 அக்டோபர் 1-ம் தேதிக்குத் தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவை தொகையினைத் திருப்பி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது என்று செய்திகள் வெளியானதை அடுத்து ஆர்காமின் பங்குகள் 15 சதவீதம் வரை உயர்ந்தது.

எரிக்சன்

ஸ்வீடிஷை சேர்ந்த எரிக்சன் நிறுவனம் தங்களுக்கு 550 கோடி ரூபாய் நிலுவை தொகையினை ஆர்காம் அளிக்க வேண்டும் என்று அதனை எப்படியாவது பெற்று தருமாறும் தேசிய நிறுவன சட்ட நீதிமன்றத்தில் மேல் முறையிட்டது.

தேசிய நிறுவன சட்ட நீதிமன்றம்

இதனை விசாரித்த தேசிய நிறுவன சட்ட நீதிமன்றம் எரிக்சன் நிறுவனத்திற்குச் சேர வேண்டிய 550 கோடி ரூபாய் நிலுவை தொகையினை 120 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.

ஆர்காம்

அதே நேரம் தங்களது சொத்துக்களை விற்றால் தான் இந்த நிலுவை தொகையினைச் செலுத்த முடியும் என்ற நிலையில் இருந்து வந்த ஆர்காம் அவற்றை விற்க இருந்த தடையினை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.

தீர்ப்பு

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 11:30 மணியளவில் வந்த போது ஆர்காம் நிறுவனம் தங்களது சொத்துக்களை முகேஷ் அம்பானிக்கு விற்றுவிட்டு தங்களது நிலுவை தொகையினைத் திருப்பி அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில் ஆர்காம் பங்குகள் உயர்ந்தன.

அனில் அம்பானி

டிசம்பர் மாதம் ஆர்காமின் ஸ்பெக்டர்ம், பைபர் சேவை, டெலிகாம் டவர்கள், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள சொத்துக்களை விற்றுக் கடனை குறைக்க அனில் அம்பானி போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

SC clears way for Mukesh Ambani’s Reliance Jio deal, Anil Ambani’s RCom Happy