உற்பத்தியை இரட்டிப்பாக்கும் டெஸ்லா.. புதிய முடிவில் எலான் மஸ்க்..!

உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லா அமெரிக்காவை தாண்டி தற்போது சீனாவிலும் உற்பத்தியை துவங்கியுள்ளது. இதற்கு ஏற்ப டெஸ்லா கார்களின் தேவை அமெரிக்கா, ஐரோப்பா கண்டங்களை தாண்டி ஆசிய சந்தையிலும் தற்போது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் டெஸ்லா தற்போது மாடல் 3 கார்களை ஒரு வாரத்திற்கு 5,000 கார்களை தயாரிக்கும் நிலையில், 2019ஆம் ஆண்டில் வாரத்திற்கு 10,000 கார்களை தயாரிக்க வேண்டும் தனது காலாண்டு முடிவுகளை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் முதல் இந்நிறுவனம் தனது உற்பத்தி அளவை 6000 கார்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் உற்பத்தி அளவை 10,000 கார்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு தொழிற்சாலையை மேம்படுத்த உள்ளது.

இக்காலாண்டில் டெஸ்லா நிறுவனம் 53,339 கார்களை தயாரித்துள்ளது, அதேபோல் 40,768 கார்களை டெலிவரி செய்துள்ளது. இதில் மாடல்3எஸ் கார்களை 18,449 விற்பனை செய்துள்ளது.

மேலும் ஜூன் காலாண்டில் இந்நிறுவனம் 742.7 மில்லியன் டாலர் நஷ்டத்தை அடைந்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Tesla aims to make 10,000 Model 3 cars per week in 2019