ஜிஎஸ்டி கவுன்சில் 29வது கூட்டம்.. சிறு, குறு & நடுத்தர நிறுவனங்களுக்குச் சலுகை அளிக்க வாய்ப்பு!

ஜிஎஸ்டி கவுன்சிலின் 29 வது கூட்டம் இன்று இடைக்கால நிதி அமைச்சரான பியூஷ் கோயல் தலைமையில் விக்யான் பவனில் சனிக்கிழமையான இன்று நடைபெற்று வருகிறது.

இன்றைய கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவாதம்

ஜிஎஸ்டி தொழில்நுட்பத்தினால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

அன்மையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 28 வது கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உள்ள சிக்கல்கள் குறித்து விவாதித்து அறிக்கை சம்ர்ப்பிக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன் படி 157 ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

ஜூலை 21-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் குளிர்சாதன பெட்டி, டிவி உட்பட 50-க்கும் மேற்பட்ட பொருட்களின் வரி விகிதம் குறைக்கப்பட்டது மற்றும் சானிட்டரி நாப்கின் உள்ளிட்ட சில பொருட்களுக்கு வரி விலக்கு அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

அருண் ஜேட்லி

29 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெறும் நிலையில் அடுத்தக் கூட்டம் முதல் அருண் ஜேட்லி பங்கேற்பார் என்றும், இந்த மாதம் இறுதிக்குள் மீண்டும் இந்தியாவின் நிதி அமைச்சர் பொறுப்பினை ஏற்பார் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

Have a great day!
Read more...

English Summary

29th GST Council Meet Today Under Piyush Goyal; Relief For MSMEs on Agenda