தொடர் நஷ்டத்தில் பிஎஸ்என்எல்.. அடுத்து என்ன திட்டம்..!

அரசு தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வர்த்தகம் தொடர்ந்து சரிந்து வருவதால், இந்நிறுவனத்தின் வருமானம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதன் எதிரொலியாக 2017-18ஆம் நிதியாண்டில் 4,785 கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ளது.

Advertisement

கடந்த நிதியாண்டை விடவும் 2017-18ஆம் நிதியாண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் 27,818 கோடி ரூபாய் என்ற குறைந்த அளவிலான வருவாயைப் பெற்றுள்ளது.

Advertisement

பிஎஸ்என்எல் நிறுவனம் 2015-16இல் 4,859 கோடி ரூபாயும், 2016-17இல் 4,789 கோடி ரூபாயும், 2017-18இல் 4,785 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைப் பெற்று வருகிறது.

மேலும் கடந்த3 நிதியாண்டுகளை ஒப்பிடுகையில் 2017-18ஆம் நிதியாண்டில் குறைவான நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் மத்திய அரசு தற்போது இந்நிறுவனத்தை நலிவடைந்த நிறுவனம் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English Summary

BSNL narrowed FY\'18 loss to Rs 4,785 cr
Advertisement