ஆதார் ஹெல்ப்லைன் எண்ணை சேர்த்தது நாங்க தான்.. ஒப்புக்கொண்ட கூகுள்..!

கடந்த சில நாட்களாகவே ஆதார் கார்டு பாதுகப்பு குறித்து மிகப்பெரிய அளவில் சர்ச்சை நிலவி வரும் நிலையில் வெள்ளிக்கிழமை ஆதார் சேவை எண்ணாக 1800-300-1947 வேலை செய்யாத, தவறான எண் என்பது ஆதார் பாதுகாப்புக் குறித்துக் கேள்வியினை மேலும் அதிகரித்து இருந்த நிலையில் அதற்கு நாங்கள் தான் காரணம் என்றும் அந்தத் தவறுக்குகு மன்னிப்புக் கேட்கிறோம் என்றும் அதனைப் பயனர்கள் பதிவு நீக்கம் செய்துகொள்ளலாம் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது தெரிவித்துள்ளது.

இந்திய தனிநபர் அடையாள ஆணையம்
இந்திய தனிநபர் அடையாள ஆணையம்

சமுக வலைதளங்களில் இந்திய தனிநபர் அடையாள ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 1800-300-1947 என்பதை நாங்கள் எந்த ஒரு டெலிகாம் மற்றும் மொபைல் நிறுவனங்களையும் சேர்க்க வேண்டும் என்று கூறவில்லை. வேண்டும் என்றே இந்த எண்ணானது தவறான நோக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

விளக்கம்
விளக்கம்

2014-ம் ஆண்டு எங்கள் குழுவிற்குக் கிடைத்த தகவலின் பட்டி இந்தப் பதிவேற்றப்பட்டுவிட்டது. தவறுக்கு மன்னிப்புக் கோருகிறோம் என்றும் அதனை எளிதாகப் பதிவு நீக்கம் செய்துகொள்ளலாம் என்றும் வரும் காலத்தில் இது போன்ற தவறுகள் நடைபெறாது என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ எண்

அதிகாரப்பூர்வ எண்

ஆதார் கார்டுக்கான அதிகாரப்பூர்வ இலவச அழைப்பு எண் 1947 மட்டும் தான் என்றும், கடந்த 2 ஆண்டுகளாக இந்த எண் தான் பயன்பாட்டில் உள்ளது என்று இந்திய தனிநபர் அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

ஹேக்கர்
ஹேக்கர்

ராபர் பாப்டிஸ்ட் என்ற பிரெஞ்ச் ஹேக்கர் உங்கள் எல்லோர் போனிலும் UIDAI என்ற பெயரில் உதவி எண் உள்ளதா என்று பாருங்கள் என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கேள்வி?
கேள்வி?

பல சேவை வழங்குநர்கள், ஆதார் கார்டு இணைப்பு செய்த, செய்யாத, ஆதார் செயலி நிறுவாத உங்கள் போனில் டீபால்ட்டாக ஆதார் உதவி என் திடீர் என்று வர காரணம் என்ன என்று உங்களால் சொல்ல முடியுமா? என்றும் இந்திய தனிநபர் அடையாள ஆணையத்தினை டேக் செய்து டிவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார். தற்போது இதற்கு கூகுளின் விளக்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Google Takes Blame For Mysterious Wrong Aadhaar Helpline Number