அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரி உயர்வு செப்டம்பர் 18 முதல் அமலுக்கு வருகிறது..!

இந்திய ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்களை அமெரிக்காவில் இற்க்குமதி செய்வதன் மீது 25 சதவீதம் வரை வரியினை டிரம்ப் அரசு உயர்த்திய நிலையில் அதற்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் 29 பொருட்கள் மீதான வரியினை ஆகஸ்ட் 4 முதல் உயர்த்த இருப்பதாக நிதி அமைச்சகம் அறிவித்து இருந்தது.

வர்த்தக அமைச்சகம்

ஆனால் வர்த்தக அமைச்சகம் இந்த வரி உயர்வை 45 நாட்களுக்குப் பிறகு அமலுக்குக் கொண்டு வரலாம் என்ற கோரிக்கையினை அடுத்து 2018 செப்டம்பர் 18 வரை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த வரி உயர்வு?

இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் 241 மில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்டீல் மற்றும் அலுமினிய பொருட்களுக்கு வரியினை உயர்த்தியதை அடுத்து இந்திய அரசு ஜூன் 21-ம் தேதி அமெரிக்கப் பொருட்கள் மீது வரி விதிக்க முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தை தோல்வி

வரி உயர்வு குறித்து இந்திய, அமெரிக்க அரசு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து 45 நாட்களுக்குப் பிறகு வரியை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

எந்தப் பொருட்கள் விலை எல்லாம் உயரும்?

ஷெல் ஆல்மண்ட்ஸ், வால்னட்ஸ், பருப்புகள், ஆப்பிள், போன்ற பொருட்கள் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது. உதாரணத்திற்குத் தற்போது 1 கிலோ ஷெல் ஆல்மண்ட் 100 ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்படும் நிலையில் அதன் விலை 120 ரூபாயாக உயரும்.

இதே போன்று இறக்குமதி செய்யப்படும் பருப்புகள் மீதான வரி 30 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக உயர உள்ளது.

 

Have a great day!
Read more...

English Summary

Higher Import Duties On US Products To Come Into Effect From September 18