ஜெட் ஏர்வேஸின் அதிரடி ஆஃபர்.. ஐரோப்பிய டிக்கெட்களுக்கு 30% சலுகை!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஐரோப்பிய விமான டிக்கெட் சலுகையாக 30 சதவீதம் டிஸ்கவுண்ட் அளித்துள்ளது. இந்தச் சலுகை விலை விமான டிக்கெட்களை 2018 ஆகஸ்ட் 17-ம் தேதி வரை புக் செய்யலாம்.

மேலும் இந்தச் சலுகையானது குறிப்பிட்ட வழித்தடங்களிலும், குறிப்பிட்ட விமானங்களிலும் எக்கானமி வகுப்புகளில் மட்டும் கிடைக்கும் என்று ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

சலுகை இல்லா வழித்தடங்கள்

ஜெட் ஏர்வேஸ் ஐரோப்பிய நாடுகளின் பயணங்களுக்குச் சலுகை வழங்கினாலும் லண்டன் மற்றும் மான்செஸ்டர் வழித்தடங்களில் டிஸ்கவுண்ட் கிடையாது என்று தெரிவித்துள்ளது.

சலுகை காலம்

ஜெட் ஏர்வேஸின் இந்தச் சலுகை விலை டிக்கெட்க்ளை 2018 ஆகஸ்ட் 17 வரை புக் செய்யலாம். எந்தத் தேதி வரையிலான பயணங்களுக்குச் சலுகைகள் வழங்கப்படும் என்று விவரங்கள் ஆன்லைனில் செக் செய்யலாம். சலுகை குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் தான் கிடைக்கும்.

பிற சலுகைகள்

ஐரோப்பிய வழித்தடங்களில் 30 சதவீதம் சலுகை அளித்து இருந்தாலும் பிற வெளிநாட்டுப் பயணங்களுக்கு 15 சதவீதம் வரை சலுகையினை அளிப்பதாக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழித்தடங்கள்

புக்கெட், மணிலா, சிட்னி, ஆக்லாந்து, பெய்ஜிங், கெய்ன்ஸ், செங்டூ, டார்வின், பாலிடா, குவாங்சோ, ஹனோய், ஹோ சி மின் நகரம், ஜகார்த்தா போன்ற வழித்தடங்களில் டிக்கெட் சலுகைகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

Have a great day!
Read more...

English Summary

Jet Airways offer: 30% discount to Europe & 15 percent on international flight tickets