ரூ.100 க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள் - ஜியோவின் அதிரடி சலுகைகள்..!

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் எதிர்பாராத சலுகை மழையைக் கணித்துச் சொல்ல முடியாத சூழல் நிலவுகிறது. ஒவ்வொரு வாரமும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ஜியோவின் 100 ரூபாய்க்கும் குறைவான அதிரடிச் சலுகைகள் வெளியாகியுள்ளன.

நடைமுறையில் உள்ள திட்டங்கள்

தொலைத் தொடர்புத்துறையில் ஜியோவின் வருகைக்குப் பிறகு, மற்ற நிறுவனங்களும் சலுகைகளை அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன. 19 ரூபாய் முதல் 9999 ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்ட ஜியோ, நூறு ரூபாய்க்கும் குறைவான ரீசார்ஜ் சலுகைகளை அறிவித்துள்ளது.

இந்தத் திட்டங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு உயர்வேக விசையுடன் 1.5 ஜி.பி. டேட்டாவுடன் 5 ஜி.பி டேட்டா வரை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன் வேகம் 100 லிகோ பைட்ஸ் க்கு பதிலாக 64 கிலோ பைட்சாகக் குறைக்கப்படுகிறது.

 

ரூ.19 திட்டம்

19 ரூபாய் மதிப்புள்ள மலிவான ரீசார்ஜ் திட்டத்தில் ஒரு நாளைக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் 20 குறுந்தகவல் சேவையுடன், 0.15 ஜிபியுடன் டேட்டா வழங்கப்படுகிறது.

ரூ.52 திட்டம்- வரம்பற்ற அழைப்புகள்

52 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யப்படும் ஒரு வாரத் திட்டத்தில், நாளொன்றுக்கு வரம்பற்ற அழைப்பு, 70 இலவச குறுந்தகவல் சேவையுடன் 0.15 ஜிபி டேட்டா அளிக்கப்படுகிறது. நாட்களுக்கு மொத்தமாக 1.05 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

ரூ.98 திட்டம்- 2ஜிபி டேட்டா

98 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தின் காலவரம்பு 28 நாட்களாகும். நாள் ஒன்றுக்கு 300 இலவச குறுந்தகவல்கள், வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 2ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வாரி வழங்குகிறது.

பிரத்யேக சலுகை

ஜியோ போன் வைத்துள்ள பயனாளிகளுக்கு 49, 99 மற்றும் 153 ரூபாயில் 3 பிரத்தியேக திட்டங்களை அறிவித்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Jio recharge offers under Rs 100: All plans explained