கோஏரின் அதிரடி ஆஃபர்.. 10 லட்சம் விமானப் பயண டிக்கெட் 1,099 ரூபாய் முதல்..!

பட்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமான கோஏர் 10 லட்சம் விமான டிக்கெட்களை 1,099 ரூபாய்க்குக் கிடைக்கும் அறிவித்துள்ளது.

இதுவே பேடிஎம் டிஜிட்டல் வால்லெட் மூலம் டிக்கெட் கட்டணங்களைச் செலுத்தும் போது கூடுதலாக 250 ரூபாய் கேஷ்பேக் சலுகையும் அளிக்கிறது.

சலுகை காலம்

கோஏர் விமானத்தின் இந்தச் சலுகை விலை டிக்கெட்களை 2018 ஆகஸ்ட் 9-ம் தேதிக்குள் புக் செய்து 2018 டிசம்பர் 31 வரை பயணம் செய்யலாம்.

எவ்வளவு டிக்கெட்கள் சலுகையில் கிடைக்கும்?

சென்ற மாதம் கோஏர் நிறுவனம் 1.2 மில்லியன் டிக்கெட்களை 1,212 கட்டணத்திற்கு விற்ற நிலையில் ஆகஸ்ட் மாதம் 10 லட்சம் டிக்கெட்களை 1,099 ரூபாய்க்கு என அறிவித்துள்ளது.

அது மட்டும் இல்லாமல் கோஏர் இணையதளம் அல்லது மொபைல் செயலி மூலம் டிக்கெட்கள் புக் செய்ய 3,000 ரூபாய் வரை டீகளும் அளிக்கப்படும்.

 

பிற சலுகைகள்

பேடிஎம் மூலம் டிக்கெட் புக் செய்யும் போது 250 ரூபாய் கேஷ்பேக் அளிப்பது மட்டும் இல்லாமல், ஜூம் கார் பயணத்திற்கு 750 ரூபாய் டிஸ்கவுண்ட்டும், மிந்தரா செயலி அல்லது ஆன்லைனில் பொருட்கள் வாங்க 2,500 ரூபாய் கூப்பனும் கிடைக்கும்.

வழித்தடங்கள்

கோஏர் நிறுவனம் அகமதாபாத், பகோத்ரா, பெங்களூரு, புவனேஷ்வர், சண்டிகர், சென்னை, டெல்லி, கோவா, கவுகாத்தி, ஜெய்ப்பூர், ஜம்மு, கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், பாட்னா, போர்ட் பேலியர், புனே, ராஞ்சி,, ஸ்ரீநகர், ஹைதராபாத் என 23 வழித்தடங்களில் விமானப் போக்குவரத்துச் சேவையினை வழங்கி வருகிறது.

Have a great day!
Read more...

English Summary

Mega GoAir offer: 1 million seats up for sale with fares starting at just Rs 1,099