2017-2018 நிதி ஆண்டில் மினிமம் பேலன்ஸ் இல்லை என 11,500 கோடி ரூபாய் அபராதம் வசூலித்த வங்கிகள்!

கடந்த 4 வருடங்களில் 24 பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் துறை வங்கிகளும் 11,500 கோடி ரூபாய் வரை மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தபட்ச இருப்புத் தொகை சேமிப்புக் கணக்குகளில் இல்லை என்பதற்காக அபராதமாக வசூலித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை மக்களவையில் குறைந்தபட்ச இருப்புத் தொகை அபராதமாக வங்கிகள் வசூலித்த கட்டண தொகையின் அளவு எவ்வளவு என்று கேட்டதற்கு நிதி அமைச்சகம் இந்தத் தகவல்களைக் கூறியுள்ளது.

எஸ்பிஐ வங்கி

2017-2018 நிதி ஆண்டில் எச்டிஎப்சி வங்கி மட்டும் 2,400 கோடி ரூபாயினைச் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொலை இல்லை என்ற காரணங்களுக்காக அபராதமாக வசூலித்துள்ளது.

எச்டிப்சி வங்கி

இந்தியாவின் மிகப் பெரிய மூன்று தனியார் வங்கி நிறுவனங்களில் அதிகபட்சமாக எச்டிஎப்சி வங்கி 590 கோடி ரூபாயினை அபராதமாக வசூலித்துள்ளது.

பொதுத் துறை வங்கிகள்

2017-2018 நிதி ஆண்டில் 21 பொதுத் துறை வங்கிகளில் முன்று வங்கிகள் மட்டும் 40 சதவீத மினிமம் பேலன்ஸ் மீதான அபராத தொகையினை வசூலித்து உள்ளன. எஸ்பிஐ வங்கி 2017 ஏப்ரல் 1ம் தேதி மீண்டும் மினிமம் பேலன்ஸ் மீதான அபராத விதிப்பினை துவங்கியதும் குறிப்பிடத்தக்கது.

ஆர்பிஐ

2015-ம் ஆண்டு இந்திய ரிசர்வ வங்கி வெளியிட்ட அறிவிப்பில் வங்கிகள் வழங்கும் சேவைகளுக்கு அவர்களது போர்டு உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து அபராதம் எவ்வளவு என்பதை முடிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தது.

அதன் அடிப்படையில் வங்கிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லா வங்கி கணக்குகள் மீது அபராத தொகையினை வசூலித்து வருகின்றன.

 

எஸ்பிஐ வங்கியில் அபராதம் எவ்வளவு?

எஸ்பிஐ வங்கி மெட்ரோ மற்றும் புற நகரப் பகுதி கிளைகளில் நிர்வகிக்கும் சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக 3,000 ரூபாயும், சிறு நகரப் பகுதிகளில் 2,000 ரூபாயும், கிராமப்புற கிளைகளில் 1,000 ரூபாயும் நிர்வகிக்கவில்லை என்றால் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் அபராதமும் அதற்கு ஜிஎஸ்டியும் வசூலிக்கிறது.

எச்டிஎப்சி

எச்டிஎப்சி வங்கியில் 2,500 முதல் 10,000 ரூபாய் வரையில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினைச் சேமிப்புக் கணக்குகளில் நிர்வகிக்கவில்லை என்றால் 150 முதல் 600 ரூபாய் வரை ஜிஎஸ்டி உடன் வசூலிக்கிறது.

குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லா கணக்குகள்

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா, மற்றும் அனைத்து வங்கிகளும் உள்ள அடிப்படை சேமிப்பு கணக்குகளைத் திறக்கும் போது குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை.

எஸ்பிஐ வங்கி பிரதான் மந்திரி ஜன் தன் யோஜான திட்ட கணக்குகளை இலவசமாகப் பராமரிக்க முடியாத காரணத்தினால் தான் மினிமம் பேலன்ஸ் இல்லா கணக்குகளின் மீது அபராதம் விதிப்பதாகத் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

 

Have a great day!
Read more...

English Summary

No Minimum balance In SavingS Account Banks Penalised Customers RS 11,500 cr