டாடா டெலிசர்வீசஸ் விற்பனை.. அரசுக்குச் செலுத்த வேண்டிய 1.3 பில்லியன் டாலர் என்ன ஆனது?

தொலைத் தொடர்புத் துறையில் ஏற்பட்ட போட்டி காரணமாக மொபைல் போன் வணிகத்தை, ஏர்டெல் நிறுத்திடம் விற்க டாடா குழுமம் முடிவு செய்துள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன் 90 பில்லியன் நிலுவைத்தொகையைச் செலுத்துமாறு மத்திய அரசின் தொலைத் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

சந்தித்த சவால்கள்

2016 ஆம் ஆண்டுத் தொலைத் தொடர்பு சேவையைத் தொடங்கிய ஜியோ-வின் அதிரடிய கட்டணக்குறைப்புச் சலுகைகளால், போட்டியைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒதுங்கிக் கொண்டன. வருவாய் மற்றும் லாபங்களில் ஏற்பட்ட சரிவு ஏற்பட்டதையடுத்து, கடன் பிரச்சினையால் பல நிறுவனங்கள் இணைக்கப்பட்டன.

டாடாவின் சரிவு

டாடா டெலிசர்வீசின் சந்தாதார்கள் எண்ணிக்கையும் கடுமையாகச் சரிவைச் சந்தித்தது 40.2 மில்லியன் பயனாளர்களின் எண்ணிக்கை 276 மில்லியன் பயனாளர்களாகச் சரிந்தது. சந்தை மதிப்பிடு 2.44 சதவீதமாக இருக்கிறது.

விரைவில் இணைப்பு

போட்டியைச் சமாளிக்க முடியாத இந்த நிலையில் டாடா டெலிசர்வீஸ் சேவையை ஏர்டெல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கு ஏர்டெல் நிறுவனம் ஒப்புக்கொண்டதால் விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நிலுவைத் தொகை நிர்ப்பந்தம்

வோடபோ- ஐடியா நிறுவனங்கள் இணைக்கப்பட்டபோது பெறப்பட்ட தொகையைப் போல. டாடா நிறுவனத்திடமும் குறிப்பிட்ட தொகையை வசூலிக்க முடிவு செய்துள்ள மத்திய தொலைத் தொடர்புத்துறை, 1.3 பில்லியன் டாலர்களைச் செலுத்தவேண்டும் என நிர்ப்பந்தித்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Tata Gets $1.3 Billion India Bill to Close Phone Deal With Airtel