இந்தியாவில் நடந்த 3 முக்கியச் சீர்திருத்தங்கள்.. மோடி அரசை புகழ்ந்த உர்ஜித் படேல்!

மோடி அரசு நிறைவேற்றியுள்ள 3 முக்கியச் சீர்திருத்தங்கள், இந்திய வரலாற்றில் யாரும் எதிர்பார்த்திராத முன்னெடுப்பு என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் புகழாரம் சூட்டியுள்ளார்.

சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம், திவாலா சட்டம் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தில் பணவீக்கத்தைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை போன்றவை, ஆண்டாண்டு காலத்துக்கு இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடியவையாகும். சீர்திருத்தங்களைத் துணிச்சலோடு மேற்கொள்ளும் அரசின் மதிநுட்பத்தை யாரும் குறை குறைத்து மதிப்பிட்டு விட வேண்டாம் என்றார்

ரிசர்வ் வங்கி சட்டத் திருத்தம்

2016 ஆம் ஆண்டு விலையை ஒரு நிலையான தன்மையில் வைத்துக்கொள்வதற்காக, ரிசர்வ் வங்கி சட்டத்தில் உள்ள நாணயவியல் கொள்கையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதில் வளர்ச்சி குறித்த நோக்கமும் அடிப்படையாக இருந்தது. நெகிழ்வான பணவீக்க கட்டமைப்பதற்கு உதவி செய்து வருகிறது

சரக்கு மற்றும் சேவை வரி

சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் கூட்டாட்சி தத்துவத்தைக் கடைப்பிடிக்கும் நாட்டுக்கு ஒரு முன்னுதாரணமான திட்டமாகும். ஜி.எஸ்.டி கவுன்சில் ஒரு பயனுள்ள நிறுவன அமைப்பாக உருவாக்கப்பட்டு, சர்வதேச பொருளாதார எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்கு உதவுகிறது. இதனால் பொருளாதார இறையாண்மையை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

 

 

திவாலா சட்டம்

மோடி அரசால் கொண்டு வரப்பட்ட திவாலா சட்டம் நாட்டின் கிரீடிட் கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்கிறது. சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்கும், சொத்துக்களின் மதிப்பை உயர்த்துவதற்கும், பங்குதாரர்களின் நலன்களைச் சமப்படுத்துவதற்கும் இந்தச் சட்டம் தேவையாக இருக்கிறது என்று உர்ஜித் படேல் கூறினார்.

இந்திய வரலாற்றின் முன்னோடி

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பொருளாதாரம் மற்றும் நிதி நிலைப்புத் தன்மையை உருவாக்குவதற்கு நமது அரசு துணிச்சலும் எடுத்த நடவடிக்கை கள் என்று தெரிவித்த படேல், வரலாற்றில் ஒரு முன்னோடியான சீர்திருத்தங்கள் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மின்னணு பரிவர்த்தனை

இந்தியாவில் மின்னணு பரிவர்த்தனை புதிய பரிமாணங்களைப் பெற்றுள்ளன. வங்கியியல், வங்கி சாரா நடைமுறைகள், பணம் செலுத்துதல், நாணய மேலாண்மையில் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உர்ஜித் படேல் கூறினார்.

Have a great day!
Read more...

English Summary

Urjit Patel praises Modi government’s ‘courage’ in implementing reforms