வோடபோன் ஐடியா சேவை விரைவில் உதயம்.. வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!

டே ஜீரோ எனப்படும் செலவினக் குறைப்பு நடவடிக்கைகளுடன் அடுத்த வாரம் தொடங்கப்படும் வோடபோன் ஐடியா தொலைத் தொடர்பு நிறுவனம், லாபமீட்டும் பெரிய நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே வோடாபோன் ஐடியாவின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்புகளை எல்லாம் இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

அதிரடி நடவடிக்கைகள்

தொடக்கத்திலிருந்தே அதிரடி நடவடிக்கைகளைத் தொரட முடிவு செய்துள்ள வோடபோன் ஐடியா நிறுவனம், விநியோகஸ்தர்கள் மற்றும் அலைவரிசை கோபுரங்களில் மாற்றங்களைச் செய்ய முடிவு செய்துள்ளது. விளம்பரம் உள்ளிட்டவற்றுக்கு ஆகும் செலவினங்களைக் குறைக்கவும், பணி நியமனம் மற்றும் பணிநீக்கம் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது

பலவீனங்களால் புதிய உத்தி

2017 ஆம் ஆண்டு இணைப்புக்கான அறிவிப்பை வெளியிட்ட வோடபோன், ஐடியா நிறுவனங்கள், செலவின சேமிப்பை 8400 கோடியாக மதிப்பீடு செய்தது. நிதி நெருக்கடியில் பலவீனமடைந்துள்ளதால், செலவினங்களின் சேமிப்பை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்பார்ப்பு

430 மில்லியன் சந்தாதார்கள், 37 சதவீதம் சந்தை வருவாய் பகிர்மானங்களைக் கொண்ட இந்த நிறுவனம், 60 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயையும், 1,25,000 கோடி ரூபாய் கடனை எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.

வேலைவாய்ப்புகள் பிரகாசம்

வேலைநீக்க நடவடிக்கையைச் சிறிது காலத்துக்குத் தள்ளிப்போட முடிவு செய்துள்ள வோடபோன் ஐடியா நிறுவனங்கள், பணிநியமனங்களைத் துரிதப்படுத்தியுள்ளது. திறமையான நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

புதுப்பிக்கப்படுமா சந்தை

இரண்டு நிறுவனங்களும் இணைந்து 2 லட்சத்து 50 ஆயிரம் அலைவரிசை கோபுரங்கள் மூலம் சேவையைத் தொடங்குகிறது. கவர்ச்சிகரமான விலைத் திட்டங்களை அறிவித்தால், உறுதி இழந்த சந்தையைப் புதுப்பிக்கலாம் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்

வோடபோன் ஐடியா நிறுவனங்களின் சேவை விரைவில் தொடங்கவுள்ளதால், ஏர்டெல், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தாக்கங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் விரைவில் சலுகைகளைப் பெறவும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Vodafone Idea To Begin Life With Focus On Cost Cuts. Jackpot To Customers