லாபத்தில் 58 சதவீத வளர்ச்சி.. ஓஎன்ஜிசி நிறுவனம் கொண்டாட்டம்..!

இந்தியாவின் முன்னணி கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனம் 2018-19ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் லாபத்தில் 58 சதவீதம் உயர்வைச் சந்தித்துள்ளது.

Advertisement


ஜூன்30 உடன் முடிந்த காலாண்டில் ஓஎன்ஜிசி நிறுவனம் 6,143.88 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளது, கடந்த நிதியாண்டில் இதன் அளவு 3,884.73 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் வருவாய் இக்காலாண்டில் 27,212.83 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் வரிக்கு முந்தைய லாபமா 13,893 கோடி ரூபாயாக உள்ளது.

Advertisement

ஏப்ரல் ஜூன் காலாண்டில் ஓஎன்ஜிசி நிறுவனம் உற்பத்தி செய்த கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 71.48 டாலர் வருவாயைப் பெற்றுள்ளது. இது கடந்த நிதியாண்டின் 48.42 டாலர் அளவை விடவும் 47.6 சதவீதம் அதிகமாகும்.

மேலும் இயற்கை எரிவாயு மூலம் million British thermal யூனிட்க்கு கடந்த வருடம் 2.48 டாலராக இருந்த நிலையில், தற்போது 3.06 டாலராகக் கிடைத்துள்ளது.

இக்காலாண்டில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மொத்த உற்பத்தி அளவு 5.3 சதவீதம் குறைந்துள்ளது.

English Summary

ONGC Q1 profit jumps 58% YoY to Rs 6,144 crore
Advertisement