ஏர்ஏசியாவின் அதிரடி ஆஃபர்.. ரூ.1,499 முதல் விமான பயணம்..!

ஏர்ஏசியா இந்தியா உள்நாட்டு விமானச் சலுகையாக 1,499 ரூபாய்க்குப் பயணம் செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது. இந்தச் சலுகை விலை டிக்கெட்கள் airasia.com இணையதளத்தில் கிடைக்கும்.

விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி சென்னை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் பிற வழித்தடங்களில் இந்தச் சலுகை கிடைக்கும் என்றும் ஏர்ஏசியா இந்தியா தெரிவித்துள்ளது.

சலுகை காலம்

ஏர்ஏசியாவின் இந்தச் சலுகை விலை டிக்கெட்கள் 2018 ஆகஸ்ட் 13 வரை புக் செய்யலாம் என்றும் 2019 ஜனவர் 31 வரை பயணம் செய்யலாம்.

ரூ.1,499 விமான டிக்கெட் சலுகை

சென்னை - பெங்களூரு, புவனேஷ்வர் - கொல்கத்தா, ஹைதராபாத் - பெங்களூரு, பெங்களூரு - கொச்சி வழித்தடங்களில் 1,499 ரூபாய் சலுகை விலை டிக்கெட் கட்டணத்தில் பயணம் செய்யலாம்.

பிற முக்கிய வழித்தட சலுகைகள்

புவன்னேஷ்வர் - ஹைதராபாத் 1,999 ரூபாய், புவனேஷ்வர் - சென்னை 2,399 ரூபாய், ராஞ்சி - கொல்கத்தா 1899 ரூபாய், நாக்பூர் - பெங்களூரு 1,999 ரூபாய், கொல்கத்தா - இம்பால் 1,899 ரூபாய், கோவா- பெங்களூரு 1,899 ரூபாய், கவுகாத்தி - கொல்கத்தா 1,999 ரூபாய், புனே - பெங்களூரு 1,999 ரூபாய், விஷாகபட்டினம் - கொல்கத்தா 1,899 ரூபாய் எனக் கட்டண சலுகையில் பயணம் செய்யலாம்.

பிற நிறுவனங்கள்

ஏர்ஏசியா சலுகை மட்டும் இல்லாமல் கோஏர் நிறுவனம் 1,099 ரூபாய் முதலும்,, ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் 2,399 ரூபாய் முதலும் விமான டிக்கெட் சலுகைகளை அறிவித்துள்ளன.

ஏர்ஏசியா விமான டிக்கெட் விதிமுறைகள்

ஏர்ஏசியாவின் சலுகை விலை டிக்கெட்களைக் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது பிற கட்டண கார்டுகள் மூலம் புக் செய்த பிறகு இரத்து செய்தால் செயல்பாட்டுக் கட்டணத்தினைத் திரும்பப் பெற இயலாது. டிக்கெட் கட்டணத்தில் விமான நிலைய வரியும் பொருந்தும். குறைந்த டிக்கெட்கள் மட்டுமே சலுகை விலையில் கிடைக்கும் என்பதால் முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Have a great day!
Read more...

English Summary

AirAsia India Offers Domestic Flight Tickets From Rs. 1,499