அமேசானின் சுதந்திர தின கொண்டாட்டம்.. ஸ்மார்ட்போன்களுக்கு 80% வரை சலுகை..!

இந்தியாவின் 72 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகை விற்பனையை அமேசான் இந்தியா அறிவித்துள்ளது. 9 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள விற்பனை மேலாவில் 40 விழுக்காடு முதல் 80 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

20,000 பொருட்கள் விற்பனை

விவோ, ஒன் பிளஸ், எல்.ஜி, பிலிப்ஸ், கேசினோ நிறுவனங்களின் தயாரிப்புகளான ஸ்மார்ட் போன்கள், மின்னணு சாதனங்கள், அழகு சாதன பொருட்கள் மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் என 20 ஆயிரம் பொருட்கள் விற்பனைக்கு வருகிறது.

தள்ளுபடி விலையில் செல்போன்

சந்தையை ஆக்கிரமித்துள்ள பிரத்யேக நிறுவனங்களின் செல்போன்கள் சலுகை விலையில் விற்பனை செய்ய அமெசான் முடிவு செய்துள்ளது. ஒன் பிளஸ் 6, ரியல்மி 1, ஹானர் 7 எக்ஸ், மோட்டோ ஜி6, சாம்சங் கேலக்சி நோட் 8, விவோ எக்ஸ் 21 உள்ளிட்ட ஸ்மார்ட் போன்கள் ஆன்லைனில் விற்பனைக்கு வருகிறது. அமேசான் வாடிக்கையாளர்களுக்கு இதில் 60 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

80 விழுக்காடுவரை சலுகைகள்

எஸ்.பி.ஐ வங்கியின் டெபிட் மற்றும் கிரீடிட் கார்டுகளுக்குக் கூடுதலாக 10 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.தகுதியுள்ள அமேசான் வாடிக்கையாளர்கள், எந்த டெபிட்,கிரீடிட் கார்டுகளைக் கொண்டும் தவணை முறையில் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும். மொபைல் போன்களுக்கு 40 விழுக்காடும், மின்னணு சாதனங்களுக்கு 50 விழுக்காடும் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 70 சதவீதமும், அழகு சாதனப் பொருட்களுக்கு 50 விழுக்காடும் சலுகை வழங்கப்படவுள்ளது.

ஈ.எம்.ஐ.வசதி

இந்தியா அமேசானுக்கு நம்பகமான சந்தை என்று தெரிவித்துள்ள அந்த நிறுவனத்தின் செயல் அதிகாரி, வாடிக்கையாளர்களுக்காக ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் கொண்டாடுவதாகக் கூறினார். இந்தச் சலுகை விற்பனையில் கூடுதல் கேஷ்பேக், ஈ.எம்.ஐ வசதி மற்றும் மாற்று விருப்பத்தேர்வுகள் அளிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.

Have a great day!
Read more...

English Summary

Amazon India's 'Freedom Sale' From August 9: Things Need To Know