7 மாத உயர்வில் முக்கியத் துறைகள்.. தொழிற்துறை உற்பத்தி அட்டகாசம்..!

இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் கோர் செக்டார் பிரிவுகள் ஜூன் மாதத்தில் சுமார் 6.7 சதவீதம் அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.

ஜூன் மாதத்தில் நாட்டில் சமெண்ட் உற்பத்தி, சுத்திகரிப்பு, நிலக்கரி, கட்டுமான துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துத் துறைகள் அனைத்தும் கோர் செக்டார் பிரிவில் முக்கியப் பங்கு விகிப்பவை.

மே 2018இல் கோர் செக்டார் 4.3 சதவீதம், கடந்த வருடம் ஜூன் மாதத்தில் வெறும் 1 சதவீத வளர்ச்சி அடைந்திருந்த நிலையில் 2018-19ஆம் நிதியாண்டின் ஜூன் மாதத்தில் 6.7 சதவீதம் என்ற 7 மாத உயர்வை அடைந்துள்ளது.

இந்திய தொழிற்துறை உற்பத்தில் இந்தக் கோர் செக்டார் சுமார் 40.27 சதவீத பங்கு விகிக்கிறது. இந்தக் கோர் செக்டாரில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புப் பொருட்கள், விவசாய உரம், ஸ்டீல், சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகியவை உள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Core sector clocks 7 month high growth of 6.7% in June