12 வருடத்திற்குப் பிறகு பெப்ஸிகோவின் சிஇஓ பதவியில் இருந்து விலகிய இந்திரா நூயி..!

உலகின் மிகப் பெரிய குளிர்பான நிறுவனமான பெப்ஸிகோவின் தலைமை நிர்வாகப் பதவியினைக் கடந்த 12 ஆண்டுகளாக வகித்த வந்த இந்தியரான இந்திரா நூயி தற்போது அதில் இருந்து தற்போது விலகியுள்ளார்.

பெப்சிகோ நிறுவனத்தின் தலைவராக உள்ள ராமோன் லாகுரடாவை புதிய தலைஅமை நிர்வாக அதிகாரியாகப் போர்டு உறுப்பினர்கள் தேர்வு செய்துள்ளனர்.

எப்போது முதல் புதிய சிஇஓ

பெப்சிகோவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ராமோன் லாகுரடா தேர்வு செய்யப்பட்ட நிலையில் இந்தப் புதிய பொறுப்புகளை 2018 அக்டோபர் 3 முதல் ஏற்பார் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்திரா நூயி

பெப்சிகோ நிறுவனத்தில் 24 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் இந்திரா நூயிக்கு இது தான் முதல் சரிவாகும். 2019-ம் ஆண்டு வரை பெப்சிகோவின் தலைவராக இவர் பதவி வகிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அறிக்கை

இந்தியாவில் வளர்ந்த எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்றும் நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. நான் எப்போதும் கனவு கண்டதைவிட மக்கள் வாழ்வில் மிகவும் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளேன், பதவிக் காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளேன், நிறையத் தயாரிப்புகளை அறிமுகம் செய்யக் காரணமாக இருந்து எல்லாம் பெருமையாக உள்ளது என்றும் பெப்சிகோ இன்று மிகப் பெரிய இடத்தில் உள்ளது, தொடர்ந்து மேலும் வளர்ச்சி அடையும் என்றும் இந்திரா நூயி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ராமோன் லாகுரடா

பெப்சிகோ நிறுவனத்தின் பிரெசிடெண்ட் ஆக 22 வயதான ராமோன் லாகுரடா செப்டம்பர் மாதம் முதல் பதவி வகித்து வந்த நிலையில் உலகளாவிய நடவடிக்கைகள், பெருநிறுவன மூலோபாயம், பொதுக் கொள்கை மற்றும் அரசாங்க விவகாரங்களை மேற்பார்வை செய்தல் போன்றவற்றைக் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்குகள்

பெப்சிகோவின் இந்த அறிவிப்பிற்குப் பிறகு நிறுவனத்தின் பங்குகளும் சற்று சரிந்து காணப்பட்டது.

உலகை திரும்பி பார்க்க வைத்த ஒரு தமிழ் பெண்..!

உலகை திரும்பி பார்க்க வைத்த ஒரு தமிழ் பெண்..!

Have a great day!
Read more...

English Summary

PepsiCo CEO Indra Nooyi to step down after 12 years By President Ramon Laguarta