பிரெஷர்களுக்கு ஜாக்பாட்.. 3 காலாண்டில் 4,000 ஊழியர்களைப் பணிக்கு எடுக்கும் டெக் மஹிந்தரா..!

ஐடி வேலை வாய்ப்புகள் சரிந்து வருவதாகக் கூறி வரும் நிலையில் இந்தியாவின் 5-ம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டெக் மகேந்திரா அடுத்த 3 காலாண்டில் 4,000 பிரெஷர்களைப் பணிக்கு எடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது மாணவர்கள் மற்றும் ஐடி வேலை தேடுபவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் காலாண்டு

2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் டெக் மஹிந்தரா நிறுவனம் 1,800 பிரெஷர்களைப் பணிக்கு எடுத்துள்ளது என்று நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரியான மனோஜ் பட் அன்மையில் முதலீட்டாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

4000 ஊழியர்கள்

மேலும் அடுத்த 3 காலாண்டுகளில் நாங்கள் எவ்வளவு நபர்களைப் பணிக்கு எடுக்க இருக்கிறோம் என்ற எண்ணிக்கை தெரியாது ஆனால் தோராயமாக 4,000 நபர்களைப் பணிக்கு எடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை

மும்பையினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டெக் மஹிந்தரா நிறுவனத்தினில் 1,13,552 நபர்கள் பணிபுரிவதாக ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். 2017-2018 நிதி ஆண்டின் இறுதி காலாண்டில் இருந்த ஊழியர்களை எண்ணிக்கையினை விட 745 நபர்கள் அதிகரித்துள்ளனர்.

டெக் மஹிந்தரா நிறுவனத்தில் 72,462 நபர்களும், பிபிஓ பிரிவில் 34,700 நபர்களும், விற்பனை பிரிவில் 6,390 நபராளும் பணிபுரிந்து வருகின்றனர்.

 

பிரெஷர்கள்

ஊழியர்களைத் தொடர்ந்து பணிக்கு எடுப்பது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நல்லது அல்ல என்று டெக் மஹிந்தராவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான குருனானி தெரிவித்துள்ளார்.

ஊழியர்கள் வெளியேற்றம்

ஊழியர்கள் வெளியேற்ற எண்ணிக்கையும் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது இத்தானை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கடந்த 12 மாதத்தில் ஊழியர்கள் வெளியேற்றம் 19 சதவீதமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Have a great day!
Read more...

English Summary

Tech Mahindra To Hire 4,000 Freshers in Next 3 Quarters