அமேசானை நேருக்கு நேர் சந்திக்க 1000 தொழில்நுட்ப வல்லுநர்களைப் பணிக்கு எடுக்கும் வால்மார்ட்!

இணையவழி வர்த்தகத்தில் மிகப்பெரிய சவாலாக இருக்கும் அமேசானை, தொழில்நுட்ப ரீதியாக எதிர் கொள்ளத் தயாராகும் சில்லறை வர்ததக நிறுவனமான வால்மார்ட், 1000 வல்லுநர்களைப் பணிக்கு அமர்த்தத் திட்டமிட்டுள்ளது.

பெங்களூரு, குர்கானில் தொழில்நுட்ப செயல்பாடுகளில் களமிறங்கியுள்ள வால்மார்ட், ஆயிரத்து 800 தொழில்நுட்ப வல்லுநர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இணைய வழியில் உலகளாவிய வர்த்தகச் சேவைகளை மேற்கொண்டுள்ள வால்மார்ட், உற்பத்தியை சார்ந்த பொருள் விற்பனையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை தகவல் அதிகாரி கிளே ஜான்சன் தெரிவித்துள்ளார் ஆய்வகங்கள் மூலம் தரவுகளை ஆய்வு செய்து, வணிக எல்லையை விரிவுபடுத்தவுள்ளதாகக் கூறினார்.

தொழில்நுட்பத்தில் ஆர்வம்

தொழில்துறையில் ஒரு தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சியை வால்மார்ட் எதிர்பார்க்கிறது. இந்தியாவில் உள்ள வால்மார்ட் கடைகள் குறிப்பிட்ட அளவில் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், இணையவழி சேவைகள் கையாளப்படுவதாகவும் ஜான்சன் கூறினார். நாட்டிற்கு வெளியே கையாளப்படும் பொருட்கள் குறித்துக் குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை என்றார்.

10 பில்லியன் செலவு

தொழில்நுட்பத்துக்கு மட்டும் வால்மார்ட் ஆண்டுக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவு செய்கிறது. வால்மாட்டின் தொழில்நுட்பம் உலகின் தலைசிறந்த ஒன்றாகக் கருதப்படுவதாகவும், சேவை வழங்கும் ஒவ்வொரு தொழில்நுட்ப நிறுவனங்களையும் வாடிக்கையாளர்களாகக் கணக்கிட்டுக் கொள்வதாகவும் அந்த அதிகாரி கூறினார். இது அமேசானுக்கு எதிரான வணிக நுணுக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போட்டிக்குத் தயார்

போட்டியை எதிர்கொள்வது குறித்துக் கவனம் செலுத்தி வரும் வால்மார்ட், செலவுகளை மேற்கொள்ளும் நிறுவனமாக இருக்கவில்லை என்று அதன் தலைமை தகவல் அதிகாரி கூறினார். சரியான திசைவழியில் தொழில்நுட்பத்தை மேற்கொள்வதும், அதற்கான உதவிகளையும், தீர்வுகளையும் வழங்குவதாகத் தெரிவித்தார்.

மறுப்பு

பிளிப்கார்ட் நிறுவனத்தை 16 பில்லியன் டாலருக்கு வாங்கியது குறித்துக் கருத்துத் தெரிவிக்க வால்மார்ட் தலைமை தகவல் அதிகாரி ஜான்சன் மறுத்து விட்டார்.

Have a great day!
Read more...

English Summary

Walmart hire’s 1,000 people for its technology operations in India To Attack Amazon