6 மாதத்திற்குப் பிறகு எந்த டோல்களிலும் காத்திருக்கத் தேவையில்லை.. நித்தின் கட்காரி அதிரடி..!

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வந்த பிறகு மாநில எல்லைகளில் இருந்த சுங்க சாவடி பிரச்சனைகள் ஏதுமில்லை என்பதால் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக டிராப்பிக் ஏற்பட்டு வருகிறது. இதனைக் குறைக்க டோல் பிளாசக்களில் ஃபாஸ்ட்-டிராக் சேவை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

இன்னும் 6 மாதத்திற்குள் அனைத்து டோல் பிளாசக்களிலும் ஃபாஸ்ட்-டிராக் சேவை அறிமுகம் செய்யப்படும் என்றும் நித்தின் தேசிய போக்குவரத்துத் துறை அமைச்சரான நித்தின் கட்காரி தெரிவித்துள்ளார்.

புதிய வாகனங்கள்

அது மட்டும் இல்லாமல் டிசம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வரும் அனைத்து புதிய வாகனங்களிலும் டீபாள்ட்டாக ஃபாஸ்ட் டேக் சேவை பொருத்தப்பட்டு இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்து டோல் கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என்பதில் இருந்து விலக்குப் பெறுவார்கள். டோல் கட்டணங்கள் தானாகவே வங்கி கணக்கில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டோல் பிளாச்சாக்கல்

நாடு முழுவது 479 டோல் பிளாசக்கள் உள்ள நிலையில் அவற்றில் 409 டோல்களில் ஃபாஸ்ட்டேக் செவை அளிக்கப்பட்டுள்ளது என்று நித்தின் கட்காரி மாநிலங்களவையின் கேள்வி நேரத்தில் தெரிவித்துள்ளார்.

ஃபாஸ்ட் டேக் சேவை

அனைத்து டோல் பிளாச்சாக்கலிலும் எப்போது முதல் ஃபாஸ்ட் டேக் சேவை துவங்கப்படும் என்று கேட்ட போது அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஃபாஸ்ட் டேக் சேவையினால் இலவசமாகச் செல்வதில் சிக்கல் உள்ளது என்று கேட்ட போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 2 வாகனங்களுக்கு மட்டுமே இலவசமாகச் செல்ல கூடிய ஃபாஸ்ட் டேக் பாஸ் வழங்கப்படும் என்றும் கூடுதல் வாகனங்கள் என்றால் கட்டணத்தினைச் செலுத்த நேரிடும் என்றும் நித்தின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார்.

டோல் கட்டணத்தினை நீக்க வேண்டும்

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் டோல் கட்டணத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த போது ஒரு சேவை உள்ளது என்றால் அதற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் அப்போது தான் புதிய சாலைகள் கட்டமைக்கப்படும், சீர் செய்யப்படும் என்று கட்காரி கூறினார்.

ஜிஎஸ்டி

மேலும் ஒரு உறுப்பினர் டோல் கட்டணத்தின் மீது உள்ள ஜிஎஸ்டி வரி விகிதத்தினை 18-ல் இருந்து குறைத்து 15 சதவீதமாக்க வேண்டும் என்று கேட்ட போது அது குறித்து நிதி அமைச்சகத்துடன் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Have a great day!
Read more...

English Summary

After 6 Months No more long waits at tolls, All tolls to have operational Fast Tag lanes Nitin Gadkari