ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களுக்குச் சம்பளப்பாக்கி.. 11 ஆயிரம் ஊழியர்கள் அவதி!

நடப்பு ஆண்டில் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்காமல் தாமதப்படுத்தி வந்த ஏர் இந்தியா விமான நிறுவனம், ஜூலை மாதத்துக்கான சம்பளம் வழங்காமல் இழுத்தடித்து வருவது ஊழியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாமதிக்கப்பட்ட ஊதியம்

11 ஆயிரம் பேரை நிரந்தர ஊழியர்களாகக் கொண்ட ஏர் இந்தியா நிறுவனம், கடந்த மாதத்துக்கான ஊதியத்தை இதுவரை வங்கிக் கணக்குகளில் செலுத்தவில்லை என்று குட் ரிட்டன் தளத்துக்கு வந்த தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பளம் வழங்க உறுதி

விமான நிறுவனங்கள் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் சம்பளம் வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த ஏர் இந்தியாவின் செய்தி தொடர்பாளர் இரண்டு நாட்களில் சம்பளம் வழங்கப்படும் என்று கூறினார்.

அமைச்சர் ஒப்புதல்

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஈக்விட்டி கடனளிப்பாக 980 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மே மாதம் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கத் தாமதமானதாக ஒப்புக்கொண்ட இணை அமைச்சர் ஜெயந்த் சின்கா , ஜூன் மாத சம்பளம் ஜூலை 2 ஆம் தேதி செலுத்தப்பட்டு விட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

நிதியளிப்பு

2017 ஆம் ஆண்டில் 48000 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஏர் இந்தியா கடனில் சிக்கியிருந்தது. அதேநேரம் திரட்டப்பட்ட நிதி திட்டம், மறுசீரமைப்புத் திட்டங்கள் மூலம் 27,195 கோடியை ஏர் இந்தியா பெற்றுள்ளதாகச் சின்கா கூறினார்.

குற்றச்சாட்டுகள்

எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்கள் நீடிக்காமல் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என விமானிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தொடர்ந்து 4 மாதங்களாகச் சம்பளம் வழங்கத் தாமதிப்பது, ஆரோக்கியமான நடைமுறை அல்ல என இந்திய வணிக விமானங்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

நிர்வாகம் அறிவிப்பு

எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்கள் நடைபெறாமல் தவிர்க்கப்படும் என ஏர் இந்தியா நிர்வாகம் கூறியுள்ளது. கடந்த ஜூன் மாதம் 650 கோடி ரூபாய் நிகரலாபம் ஈட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Air India Again Delays Employees Salary Pay For July