மேக் இன் இந்தியாவை ஊக்குவிக்க 328 ஜவுளி பொருட்கள் மீதான இறக்குமதி வரியை உயர்த்தி மத்திய அரசு அதிரடி!

உள்நாட்டு உற்பத்தியினை அதிகரிக்க மற்றும் வேலை வாய்ப்பினை உருவாக்க மத்திய அரசு செவ்வாய்க்கிழமை 328 ஜவுளி பொருட்கள் மீதான இறக்குமதி வரியினை இரட்டிப்பாக்கி 20 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஜவுளி பொருட்கள் விலை உள்நாட்டு தயாரிப்புகளை விடக் குறைவான விலைக்குக் கிடைத்து வந்ததற்கு இந்த வரி உயர்வு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

வேலை வாய்ப்பு

மத்திய அரசின் இந்த வரி உயர்வு முடிவால் 10.5 கோடி நபர்களுக்கு ஜவுளி உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்பு அதிகரிக்க உதவும் என்று தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

ஜூலை மாதம்

ஜூலை மாதம் மத்திய அரசு ஜாக்கெட்ஸ், சூட்ஸ் மற்றும் கார்பெட் உட்பட 50 ஜவுளி பொருட்கள் மீதான இறக்குமதி வரியினை இரட்டிப்பாக உயர்த்தியது. பின்னர் இந்த முடிவு உள்நாட்டு ஜவுளி உற்பத்தியினை அதிகரிக்கவே என்றும் கூறியது.

இந்த வரி உயர்வானது மத்திய மறைமுக வரி வாரியத்திடம் இருந்து அறிவிப்பு மூலம் தெரியவந்துள்ளது.

 

நன்மை & பாதிப்பு

பல ஜவுளி பொருட்கள் மீதான இறக்குமதி உயர்த்தப்பட்டுள்ளது. இது உள்நாட்டு உற்பத்தியினை ஊக்குவிக்கும் அதே நேரம் வங்க தேசம் போன்ற சிறிய நாடுகளுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

சீன ஃபைபர்

வரி உயர்வு காரணத்தினால் சீனாவில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டு வரும் கைகளால் உருவாக்கப்படும் ஃபைபர் பொருட்கள் மீதான வரி 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை விலை உயரவும் வாய்ப்புள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Modi Govt Doubles Import Duty On 328 Textile Items To Boost ‘Make in India’