அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 2 வர சரிவு..!

வர்த்தகப் போர் மூழும் சூழலால் இறக்குமதியாளர்களுக்கு அதிகளவில் அமெரிக்க டாலர் தேவையுள்ளதால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 5 பைசா சரிந்து 68.93 ரூபாயாக உள்ளது.

Advertisement

அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போர் அபாயத்தினால் டாலருக்கு எதிரான அனைத்து நாடுகளின் நாணயங்களும் தடுமாற்றத்தினைச் சந்தித்து வருகின்றன, அதே தாக்கம் இந்திய ரூபாய் மதிப்பின் மீதும் உள்ளது.

Advertisement

வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 28 பைசா சரிந்து 68.88 ரூபாயாக இருந்தது.

செவ்வாய்க்கிழமை பங்கு சந்தை புதிய உச்சத்தினைத் தொட்ட சில நிமிடங்களில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 71.87 புள்ளிகள் என 0.20 சதவீதம் சரிந்து 37,621.35 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 18.40 புள்ளிகள் என 0.16 சதவீதம் சரிந்து 11,368.70 ரூபாயாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

English Summary

Rupee Declines 5 Paise, Hits 2 week Low Against US Dollar
Advertisement