வால்மார்ட் நிறுவனத்தில் 1000 ஊழியர்கள் பணி அமர்த்த முடிவு..!

அமெரிக்காவின் முன்னணி ரீடைல் விற்பனை நிறுவனமான வால்மார்ட் இந்தியாவில் ஏற்கனவே வர்த்தகம் செய்யத் துவங்கிய நிலையில் ஆன்லைன் சந்தையில் வர்த்தகம் செய்யப் பிளிப்கார்ட் நிறுவனத்தைக் கைப்பற்றிய நிலையில், தற்போது டெக் துறையை மேம்படுத்த புதிய முடிவை எடுத்துள்ளது.

புதிய முடிவு

இந்தியாவில் அமேசான் உடன் போட்டி போடும் வகையில் வால்மார்ட் தனது வர்த்தகச் சந்தையை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் வால்மார்ட் நிறுவனம் தற்போது தனது டெக் துறையை மேம்படுத்த 1,000 ஊழியர்களைப் பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளது.

 

1,800 ஊழியர்கள்

வால்மார்ட் நிறுவனம் தற்போது பெங்களுரூ மற்றும் கூர்கான் பகுதிகளில் அலுவலகம் வைத்து தனது வர்த்தகத்தை நிர்வாகம் செய்து வருகிறது. இந்தியா வர்த்தக நிர்வாகம் செய்யச் சுமார் 1,800 ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளது. இந்நிலையில் கூடுதலாக 1000 ஊழியர்களைப் பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளது.

 

 

ஊழியர்கள் வெளியேற்றம்

கடந்த இரு வருடமாக வால்மார்ட் அதிகளவிலான ஊழியர்களை வெளியேற்றி வந்த நிலையில், பிளிப்கார்ட் நிறுவனத்தைக் கைப்பற்றிய பின்பு புதிய ஊழியர்களைப் பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளது.

10 பில்லியன் டாலர்

மேலும் வால்மார்ட் நிறுவனம் இந்த வருடம் தனது உலகளாவிய வர்த்தகத்தை மேம்படுத்த தொழில்நுட்பத்தில் 10 பில்லியன் டாலர் தொகையைச் செலவிட முடிவு செய்துள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Walmart to hire 1,000 more people