தங்க முட்டையிடும் வாத்துக்கு ஆபத்து.. 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் இழுபறி!

அதிக விலை நிர்ணயிக்கப்பட்டதால் ஏற்கனவே பலமுறை தோல்வியடைந்த அலைக்கற்றை ஏலம், 5 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் இழப்பைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. 5 டிரில்லியன் டாலர் வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஏலத்தைப் புறக்கணிக்கத் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

தங்க முட்டைக்கு ஆபத்து

மத்திய அரசின் வருமானத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகித்து வருகின்றன. இந்நிலையில் 5 ஜி அலைக்கற்றை ஏலத்துக்கு 5 டிரில்லியன் டாலர்களை மொத்த விலையாக டிராய் நிர்ணயம் செய்துள்ளது. இந்தப் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், ஏல விற்பனையில் மிகப்பெரிய அடி விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியை உருவாக்க முயற்சி

அலைக்கற்றை ஏலம் ஒரு நிகழ்வாக இருக்காது எனத் தெரிவித்துள்ள எடல்வெய்ஸ் செக்யூரிட்டி நிறுவனம், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கிடையே ஒரு போட்டியை ஏற்படுத்தி, அதன் மூலம் கல்லாக் கட்டுவதற்கு 5ஜி அலைக்கற்றை ஏலத்தை அரசு பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

விலையைக் குறைக்க வேண்டுகோள்

5 ஜி அலைக்கற்றை ஏலம் பரிந்துரைக்கப்பட்ட விலைக்கு விற்பனை செய்யப்பட்டால், எதிர்பார்த்ததை விட அதிகமாகும் இருக்கும். 700 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை 45 சதவீதம் உள்ளது. இதன் மதிப்பு கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்டதைவிட 40 சதவீதம் குறைவானது. இருப்பினும் ஏலத்தில் பங்கெடுப்பதற்கு முன் விலையைக் குறைக்க வேண்டும் என ஜியோ தெரிவித்துள்ளது.

அலைக்கற்றை ஏலத்தில் ஒப்பீடு

தென்கொரிய 3500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்தையும், 5 ஜி விலை நிர்ணயித்தையும் ஒப்பிட்டுள்ள தொழில்துறை நிபுணர் ஒருவர், 3.5 GHz அலைக்கற்றை ஏலத்தில் ஏற்பட்ட நட்டத்தை, தொழில் வளர்ச்சியில் ஏற்பட்ட வருமானத்தின் மூலம் ஈடு செய்ததாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுயபரிசோதனை தேவை

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே நசுக்கப்பட்டு வரும் நிலையில், தொலைத் தொடர்புத்துறை ஆணையம் பரிந்துரைத்துள்ள விலையை மத்திய அரசு சுயபரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் குரல் எழுகிறது

வீழ்ச்சியால் விளைவு

ஸ்பெக்ட்ரம் விலையில் திடீர் என்று ஏற்படும் தீவிர வீழ்ச்சிகள் அரசாங்க அதிகாரிகளை ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்க வைக்க வாய்ப்புள்ளதாகவும், இதில் ஆணையம் கவனமாகச் செயல்பட வேண்டும் வேறுபலர் தெரிவித்துள்ளார்.

அரசுக்கு கவலை இல்லை

அலைக்கற்றைகளின் அபரிமிதமான விலையேற்றத்தால் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு ஏற்படும் நிதி நெருக்கடிகள் பற்றி அரசு கவலைப்படவில்லை என்று இது காட்டுகிறது.

Have a great day!
Read more...

English Summary

Will telecom industry continue to be the goose that lays the golden egg 5G Specturm?