கருணாநிதி இழப்பிற்கு இரங்கல் தெரிவித்த ஸ்ரீனிவாசன் முதல் மஹிந்தரா வரை..!

திமுகத் தலைவர் மற்றும் தமிழ் நாட்டின் முதல்வராக 5 முறை இருந்த கருணாநிதி அவர்களின் இழப்பிற்கு இந்திய தொழில் நிறுவன தலைவர்கள் அவரின் தொழில் துறை வளர்ச்சிக்கான ஆர்வம் மற்றும் பெருமைகளுடன் தங்களது இறங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீனிவாசன்
இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீனிவாசன்

இந்திய அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கட்சியை இயக்கி வந்துள்ளார் என்று இந்தியா சிமென்ட்ஸ் என் ஸ்ரீனிவாசன் கருணாநிதிக்குப் புகழ் அஞ்சலி செய்துள்ளார். தொழிற்சாலைகளை உறுவானால் தான் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று கூறுபவர் கருணாநிதி, அவருடன் நெருங்கிய தொடர்பில் நான் இருந்துள்ளேன், அவர் எப்போதும் தொழில் துறை வளர்ச்சிக்கு மிகப் பெரிய ஆதரவை அளித்து வந்துள்ளார் என்றும் கிரெக்கெட் விளையாட்டில் ஈடுபாடு உடையவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அவருக்குப் பிடித்த ஐபிஎல் அணி என்றும் கூறியுள்ளார்.

ராகேஷ் பார்தி மிட்டல்
ராகேஷ் பார்தி மிட்டல்

நாட்டின் சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட ஒரு எழுச்சியூட்டும் தலைவரை இழந்துள்ளோம், தமிழ் நாட்டின் வாடுகின்ற மற்றும் நியாயமான சமூக-பொருளாதார வளர்ச்சி மக்களுக்காகப் பாடுபட்டவர் என்றும் தமிழக முதல்வராக இவர் இருந்த காலகட்டங்களில் மாநிலத்தின் தொழில் துறை வளர்ச்சி மிகப் பெரிய அளவில் இருந்ததை யாராலும் மறுக்க முடியாது என்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு தலைவர் ராகேஷ் பார்தி மிட்டல் கூறினார்.

ஆனந்த் மஹிந்தரா

ஆனந்த் மஹிந்தரா

மஹிந்தரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்தரா திமுகத் தலைவருடனா சந்திப்பில் கிடைத்த தகவல், நகைச்சுவை மற்றும் இதயப் பூர்வமான சிரிப்பு, கவுன்ட்டர்கள் போன்றவை நினைவிற்கு வருவதாகத் தெரிவித்துள்ளார். மிகவும் பிரபலமான மனிதர்கள் எப்போதும் சிறந்த மனித தன்மை உடையவர்கள்.. என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதாப் ரெட்டி
பிரதாப் ரெட்டி

அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவரான பிரதாப் சி ரெட்டி அவரது இழப்புத் தன்னைத் தனிப்பட்ட முறையில் பாதித்துள்ளதாகவும் இந்தியாவின் முதல் கார்ப்ரேட் மருத்துவமனையாக அப்போலோவை உருவாக்க எனக்கு அவர் பல வகையில் ஆதரவு அளித்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

எம் ரஃபீக் அகமது
எம் ரஃபீக் அகமது

சென்னை ஸ்ரீபெரும்புதூர்-ஒரகடம் தொழிற்துறை காரிடார் கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் அமைக்கப்பட்டது என்பதை நினைவு கூர்ந்த FICCI மற்றும் CLE-ன் முன்னாள் தலைவரான எம் ரஃபீக் அகமது மாநிலத்தின் தொழில் துறைக்கு முக்கியப் பங்காற்றிய தலைவரை இழந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பி முராரி
பி முராரி

FICCI தலைவரின் ஆலோசகரான பி முராரி தலைவர் கருணாநிதி பகுத்தறிவு இயக்கத்தினைச் சார்ந்தவர் என்றாலும் அவரது அணுகுமுறை மிகவும் மதச்சார்பற்ற மற்றும் அனைவருக்கும் பொருந்த கூடியது என்றும், இந்தத் தலைமுறையின் மிகப்பெரிய இலக்கிய மற்றும் அரசியல் பிரமுகர்களில் ஒருவரை தமிழ்நாடு இழந்தது என்றும் உண்மையில், மாநிலத்திற்குப் பெரும் இழப்பு என்றும் கூறியுள்ளார்.

Have a great day!
Read more...

English Summary

Corporate India mourns the passing of a business friendly leader