ரிசர்வ் வங்கியின் தலைவராக குருமூர்த்தி நியமனம்.. மத்திய அரசு முடிவு..!

இந்திய ரூபாய் மதிப்பையும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முக்கியமான பணியைச் செய்து வரும் ரிசர்வ் வங்கியின் பார்ட் டைம் டைரக்டராகத் துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் எஸ் குருமூர்த்தியும், ஷாஹாகர் பார்தி என்னும் என்ஜிஓ-வின் தலைவர் சதீஷ் மராதி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல்

இவர்களின் நியமத்திற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளது மட்டும் அல்லாமல் நிதியமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது.

பணிக்காலம்

இவர்களின் நியமனம் பகுதி நேரத் தலைவராக இருந்தாலும், பணிக்காலம் 4 வருட காலம் என்பது குறிப்பிடத்தக்கது

துக்ளக் மற்றும் ஆர்எஸ்எஸ்

எஸ் குருமூர்த்தி, துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் மட்டும் அல்லாமல் ஸ்வதேஷி ஜார்கன் மன்ச் என்னும் ஆர்எஸ்எஸ் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பின் துணை தலைவர் ஆவார்.

நிர்வாகக் குழு

ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுவில் இருக்கும் 10 தலைவர்கள் பதிவியும் தற்போது நிரப்பப்பட்டுள்ளது. மேலும் இக்குழுவில் அரசு சார்பாக இரு அரசு அதிகாரிகளும் உள்ளனர்.

நிர்வாகக் கூட்டம்

இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் கூட்டம் மும்பையில் புதன்கிழமை நடக்க உள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Government appoint S Gurumurthy as part time directors on RBI board