ஆதார் இல்லையா.. தபால் முறையில் வருமான வரி தாக்கல் செய்யலாம்.. அனுமதி அளித்த நீதிமன்றம்!

குஜராத் உயர் நீதிமன்றம் இன்று வெளியிட்ட தீர்ப்பு ஒன்றில் பான் - ஆதார் கார்டு இணைப்பினை செய்யாமல் தபால் முறையில் வருமான வரியினைத் தாக்கல் செய்யலாம் என்றும் அதனை வருமான வரித் துறை ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

2018 ஆகஸ்ட் 31 தான் வருமான வரி தாக்கல் செய்யக் கடைசித் தேதி என்ற நிலையில் எம்.ஆர் ஷா மற்றும் எ ஒய் கோஜி நீதிபதிகள் கே ஆர் கோஷ்திக்கு அளித்த தீர்ப்பு முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

வருமான வரி தாக்கல் விதி

வருமான வரி தாக்கல் விதிகள் படி வருமான வரி துறையின் இணையதளத்தில் படிவத்தினைப் பதிவேற்றிய பிறகு ஆதார எண்ணை உள்ளிட வேண்டும்.

குஜாராத் நீதிமன்றம்

குஜாராத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கோஷ்திக்கு அளித்த தீர்ப்பில் 2018-2019 மதிப்பீடு ஆண்டுக்கான வருமான வரியை இவர் தாக்கல் செய்யும் போது ஆதார் எண்ணைக் கேட்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

சவால்

2017 நிதி சட்டம் பிரிவு 139 ஏஏ கீழ் ஜூலை 1 வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் கார்டு கட்டாயம் என்பதற்கு எதிராகச் சவாலாகப் போராடி வென்றுள்ளார்.

ஆதாருக்கு விண்ணப்பிக்கவில்லை

கோஜி தான் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும், அதனால் வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆதார் - பான் இணைப்பு காலக்கெடு நீட்டிப்பு

மத்திய அரசு ஆதார் - பான் எண் இணைப்பினை செய்ய 2019 மார்ச் 31 வரை காலக்கெடு நீட்டிப்பினை அளித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆதார் குறித்துத் தொடர்ந்து சர்ச்சைகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் உள்ள நிலையில் குஜராத் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பானது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

 

Have a great day!
Read more...

English Summary

Gujarat High Court Allows Man To File ITR Without Aadhaar