இந்திய பெண்களை பந்தாடும் உற்பத்தி துறை.. பயமுறுத்தும் பாலின சமத்துவமின்மை..!

இந்தியாவில் பொருளாதார உற்பத்தி துறையில் பெண்களின் பங்களிப்புக் கணிசமாகக் குறைந்து வருகிறது. பாலினச் சமத்துவத்தையும், அதிகாரமளித்தலையும் நடைமுறைப்படுத்தினால் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் எனப் புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது

புள்ளி விவரம்

2020 ஆம் ஆண்டு இது தொடர்பாக வெளியாகும் ஆய்வு முடிவுகள், பெண்களுக்கான வேலைவாய்ப்புகளையும், நலத்திட்டங்களையும் வகுப்பதற்கு உதவியாக இருக்கும் என்று தேசிய மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் பெண்கள் அதிகம்

உலக அளவில் ஆண்களை விடப் பெண்கள்தான் அதிகஅளவில் வேலை செய்கிறார்கள். 75 சதவீதம் பராமரிப்பு பணி மற்றும் டொமஸ்டிக் வேலைகளில் ஈடுபடுகிறார்கள். 13 சதவீதம் பேர் உற்பத்தித்துறையில் உள்ளனர். இது தேசிய கணக்கெடுப்புப் பதிவில் சேர்க்கப்பட்டிருந்தால் உள்நாட்டு மொத்த உற்பத்தி 15 முதல் 50 விழுக்காடு வரை இருந்திருக்கும்.

வீட்டுவேலைகளில் பெண்கள்

இந்தியாவில் அதிக அளவிலான பெண்கள் உற்பத்தித் துறையில் பங்களிக்காமல் குழந்தைகள் மற்றும் பெரியவர்களைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் 49 சதவீதத்துக்கு அதிகமான மகளிர், ஒரு நாளைக்கு 352 நிமிடம் டொமஸ்டில்
வேலைகளைச் செய்கின்றனர்.

வாய்ப்பு வேண்டும்

பொருளாதார வளர்ச்சி நடவடிக்கையில் ஆண்டுகளுக்கு நிகராகப் பெண்களை ஈடுபடுத்தியிருந்தால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 27 விழுக்காடு உயர்ந்திருக்கும் என்று பன்னாட்டு நிதியம் கணித்துள்ளது. தொழிலாளர் பிரிவில் பெண்களின் பங்களிப்பு சரிந்திருப்பினும், வாழ்க்கைத் துணைக்கு நிகராக 43 விழுக்காட்டினர் பங்கேற்றுள்ளதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது

அரசியல் ஆதாயம்

அரசியல் ஆதாயத்துக்காகப் பெண்களின் வேலைநேரம் அரசுகளால் மிச்சப்படுத்தப்படுகிறது. மோடியின் எரிவாயு உருளை விநியோகத் திட்டம் அடுப்பெரிக்கும் வேலையை மிச்சப்படுத்தியுள்ளது. எஞ்சியுள்ள நேரத்தில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஆய்வு முடிவில் தெரிய வரும் என்று தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய திட்டங்கள் தேவை

தேசிய வருவாயில் பெண்களை அதிகரிக்க வேலை வாய்ப்புத் திட்டங்களையும், நலத்திட்டங்களையும் உருவாக்க வேண்டும். தொழிலாளர் பங்கு விகிதம் மற்றும் கொள்கை மாற்றங்களைச் செய்ய வேண்டும் என நிதி ஆயோக் பரிந்துரைத்தது.

பாலின சமத்துவம்

பரவலான வேலை வாய்ப்புகளை ஆண்களே கைப்பற்றுகிறார்கள். ஆகையால் பெண்களுக்கான இடம் சுருங்குகிறது. எனவே பாலின சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல் போன்ற நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்கிறது இதுவரை வெளியான தரவு.

Have a great day!
Read more...

English Summary

Mapping Unpaid Women's Work Is India's Answer to Jobs Puzzle