சாப்ட்பேங்க்-இன் லாபம் 49 சதவீத உயர்வு.. பிளிப்கார்டுக்கு கோடான கோடி நன்றி..!

ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான சாப்ட்பேங்க் நிறுவனம் ஜூன் காலாண்டில் செயலாக்க லாப அளவுகள் எப்போதும் இல்லாத அளவிற்கு 49 சதவீத உயர்வை பெற்றுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் பிளிப்கார்ட் தான்.

பிளிப்கார்ட் நிறுவனத்தில் வால்மார்ட் 75 சதவீத பங்குகளைக் கைப்பற்றிய நிலையில், இந்நிறுவனத்தில் இருந்து பங்குகளைச் சாப்ட்பேங்க் விற்பனை செய்துவிட்டு வெளியேறியது. இதன் காரணமாகச் சாப்ட்பேங்க் பல பில்லியன் டாலர் தொகையை லாபமாகப் பெற்றுள்ளது.

இதன் எதிரொலியாக ஜூன் காலாண்டில் சாப்ட்பேங்க் நிறுவனத்தின் செயலாக்க லாபம் 6.42 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, இது ஜப்பான் யென் மதிப்பில் 715 பில்லியன் யென்.

இதுமட்டும் அல்லாமல் இக்காலகட்டத்தில் ஜப்பான் சாப்ட்பேங்க் கட்டுப்பாட்டில் இருக்கும் சிப் தயாரிப்பு நிறுவனமான ஆர்ம் ஹோல்டிங்க்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ததன் வாயிலாகவும் சாப்ட்பேங்க்-இன் லாபம் அதிகரித்துள்ளது.

சாப்ட்பேங்க் நிறுவனத்தின் முதலீடு செய்த 24 மாதத்தில் முதலீட்டை முழுமையாக விற்றுவிட்டு வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

SoftBank profit up 49% on Flipkart