குடிசையில் இருந்து கோபுரம்.. உண்மையான ஸ்லம்டாக் மில்லியனர்..!

தனது 23வது வயதில், கையில் வெறும் 54,000 ரூபாயுடன்($795) கேரளாவில் இருந்து புறப்பட்டு, புதுவாழ்வை தானே துவங்க லண்டன் சென்றார் ரூபேஷ் தாமஸ். மெக்டொனால்டில் மணிக்கு 5.30 டாலர் சம்பாதித்த இவர், தற்போது தனது 39வது வயதில் தொழில்முனைவோராக, பல மில்லியன் டாலர் மதிப்புள்ள, பானங்கள் விற்கும் ஸ்டார்ட்அப் நிறுவனமான 'டக் டக் சாயா'விற்கு அதிபதியாக மாறியுள்ளார். தான் எப்படிச் சுயமாக மில்லியனராக மாறினார் என்பதை அவரே கூறியதை இங்கே காணலாம்.

குழந்தைபருவ பிரச்சனைகள்

1978ஆம் ஆண்டு மே மாதம் பிறந்த ரூபேஷ், என்னதான் குடும்பம் நிதி பிரச்சனைகளைச் சந்தித்தாலும், தாய் ஷ்யாலா, தந்தை ஜோசப் மற்றும் தம்பி ராக்கேஷ் உடன் குழந்தைபருவத்தில் மகிழ்ச்சியாகவே வளர்ந்துவந்தார். ' ஒன்றுமில்லாத குடும்பத்தில் இருந்து தான் வந்தேன். ஒரு சிறு வாடகை வீட்டில் தான் எனது தாய் மற்றும் சகோதரர்களுடன் வளர்ந்தேன். எனக்கு 13 வயது இருக்கும் போது தான் கடைசியாக நானும் எனது சகோதரனும் சொந்த படுக்கையில் படுத்தோம்' என்பதை நினைவு கூறுகிறார் ரூபேஷ்.

பள்ளியில் சிறந்த மாணவர்

குடும்பத்தில் இருந்த நிதி பிரச்சனைகள் எதுவும் ரூபேஷின் படிப்பில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தனது 18 வயதில், வீட்டிலிருந்து வடக்கில் 400மைல் தொலைவில் உள்ள சென்னைக்குச் சென்று, சென்னை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தார். "நான் பள்ளியில் படிக்கும் போது அறிவியல் மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்கினேன். அப்போது நாங்கள் இருந்த சூழலில் இது மட்டுமே நான் பொறியியல் படிப்பை தேர்வு செய்யக் காரணமாக இருந்தது" என விளக்குகிறார் ரூபேஷ்.

எப்போதும் பெரிதாகக் கனவு காணுதல்

இவரின் குழந்தைப்பருவம் முழுவதுமே, உலகின் மற்றொரு பகுதியில் தனக்கான சிறந்த வாழ்க்கையைக் கட்டமைக்க முடியும் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. "எண்ணங்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்துதல், வித்தியாசமான சிந்தனை மற்றும் திறந்த புத்தகமாக இருப்பது என்பது எனக்கு மிகவும் முக்கியம் மற்றும் நான் சிந்திக்கும் விதத்தை வைத்து பார்க்கும் போது எனது எதிர்காலம் மேற்கத்திய நாடுகளில் தான் இருக்கும் என உறுதியாக நம்பனேன்" என்கிறார் ரூபேஷ். "எனது கேரள பாரம்பரியத்தை நினைத்து நான் மிகவும் பெருமைபடுகிறேன். ஆனால் இந்தியாவிற்கு வெளியே தான் எனது முழுத் திறனையும் காண்பிக்க முடியும் எப்போது நினைப்பேன்" என்கிறார்.

வெறும் $795 உடன் லண்டன் பயணம்

23 வயதில் கையில் வெறும் 795 டாலருடன், லண்டனுக்குப் புறப்பட்டார் ரூபேஷ். "எனக்கென்று எந்தவொரு குறிப்பிட்ட சமயமும் இல்லை. ஆனால் எனது தந்தை ஐக்கிய அரசு நாட்டில் உள்ள பயண ஏற்பாடு செய்யும் நிறுவனத்தில் பணியாற்றிய போது, ஐரோப்பியா செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அப்போது ஐரோப்பாவில் மக்கள் எப்படி வசிப்பார்கள் மற்றும் எனக்கு அது சாத்தியமா எனக் கனவு காண ஆரம்பித்தேன்" என்கிறார்.

முக்கியச் சின்னங்களைப் பார்த்தல்

" லண்டனுக்கு வந்ததும் நான் செய்த முதல் விசயம், அங்குள்ள பாராளுமன்றம் மற்றும் பிக்பென் போன்ற முக்கிய இடங்களுக்குச் சென்றேன். வெஸ்ட்மின்ஸ்டர் டியூப் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்து, வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தின் மீது நின்று கொண்டிருந் அந்தக் குறிப்பிட்ட நிகழ்வை எனது வாழ்நாளில் மறக்க முடியாது. அந்த மாலைப்பொழுதில் எனது கனவு நினைவேறியது" எனப் பகிர்கிறார்.

மெக்டொனால்டில் முதல் வேலை

கிழக்கு லண்டனில் ஸ்ட்ரட்போர்டில் குடியிருப்பு ஒன்றை கண்டுபிடித்த ரூபேஷ், மெக்டொனால்டில் பணிக்குச் சேர்ந்தார். " லண்டனில் இருப்பதைப் பாக்கியம் எனக் கருதியதாலும், வாழ்வில் ஏதாவது சாதிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதாலும் என்னுடைய துவக்க நாட்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. " ஒரு மணி நேரத்திற்கு 5.30 டாலர் ஊதியம் வழங்கினாலும், சிரித்துக்கொண்டே மெக்டொனால்டில் நீண்ட நேரம் வேலை பார்த்ததுண்டு" என்கிறார். அடுத்தச் சிலவாரங்களிலேயே, வீடு வீட்டிற்குச் செல்லும் விற்பனை பிரதிநிதியாக இரண்டாவது வேலைக்குச் சேர்ந்தார்.

மனைவியைச் சந்தித்த ரூபேஷ்

அசைக்கமுடியாத தொழில் தர்மத்தால் விரைவில் நிறுவனத்தில் சிறப்பான நபராக மாறிய ரூபேஷ் 2002ல் குழு தலைவராகப் பதவியுயர்வு பெற்றார். பணியிடத்தில் தனது மனைவி அலெக்ஸான்டிரியாவை சந்தித்த அவர், 2007ல் திருமணம் செய்துகொண்டார். "அது ஒரு கண்டதும் காதல் நிகழ்வு. அவரைப் பார்த்த அந்த நொடியே, எனது வாழ்வின் கடைசி வரை வருபவர் அவர் தான் எனக்குத் தெரிந்துவிட்டது" எனக் கூறுகிறார் ரூபேஷ்.

உத்வேகத்திற்கான எதிர்பார்ப்பு

தனது பணியில் சிறந்து விளங்கி வந்த ரூபேஷ், தனக்கு மிகவும் பிடித்த உணவுத்துறையில் ஏதேனும் புதிதாக என்ற எண்ணம் உறுத்திக்கொண்டே இருந்தது. " விற்பனை மற்றும் தொலைத்தொடர்பு தொழிலை மகிழச்சியுடன் செய்து வந்தாலும், அதில் நாட்டம் குறைவாகவே இருந்தது. எனவே நான் மற்ற தொழில்கள் மற்றும் வாய்ப்புகளைத் தேடினேன். மேலும உணவு சம்பந்தப்பட்ட தொழிலில் அதிக ஆர்வமும் இருந்தது." என்ற ரூபேஷ்க்கு, மனைவி அலெக்ஸாண்டிரியா உடன் விடுமுறைக்கு இந்தியா வந்த போது அதற்கான உத்வேகம் பிறந்தது.

அந்த யோசனை

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட லஸ்ஸி போன்ற பானங்களைத் தயாரிப்பதை தான் உண்மையில் கருத்தில்கொண்டிருந்தார் ரூபேஷ். ஆனால் அதற்கு லண்டன் தேவையான அளவு சந்தை இல்லை என்பதை உணர்ந்தார். 2014 டிசம்பரில் கேரளாவிற்கு வந்த பயணத்தின் போது தான், அலெக்ஸாண்டிரியா பாலுடன் கலந்த இந்திய தேநீரை விரும்பி அருந்துவதைக் கவனித்தார். அது தான் "டக் டக் சாயா"நிறுவனம் உருவாகக் காரணமாக இருந்தது.

சந்தையில் உள்ள காலியிடத்தை நிரப்புதல்

உலகமே தரம்வாய்ந்த தேநீரை பருகிக்கொண்டிருந்த நிலையில், லண்டன் சந்தையில் மட்டும் தரம் குறைந்த தேநீரே நிரம்பியிருந்தது. அதிக வாடிக்கையாளர்களை ஈரக்கும் அந்தப் பானத்தை உடனடியாகப் புரிந்துகொண்டார் ரூபேஷ். அலெஸ் அருந்திய தேநீரின் அளவும், அது எவ்வளவு பிரபலமாக அங்குக் கிடைக்கிறது என்பது எனக்குத் தெரிந்தது. லண்டன் முழுவதும் தேநீர் விற்கப்பட்டாலும், அதிகச் சர்க்கரையோடு, தேநீரின் உண்மையான சுவை என்னவென்றே தெரியாமல் இருந்தனர் அங்குள்ள தேநீர் விரும்பிகள். அங்கு விற்கப்பட்ட தேநீர் வெறும் இனிப்பூட்டப்பட்ட பால்" என்கிறார் ரூபேஷ்.

தொழிலின் துவக்கம்

இந்த யோசனை தோன்றிய உடனே, எனது சேமிப்பான 199,000 டாலரை கொண்டு நிறுவனத்தைத் துவங்க திட்டமிட்டேன். இரண்டு ஆண்டுகள் கழித்து, தேநீரின் சரியான கலவை மற்றும் அதைத் தயாரிக்கும் முறை துல்லியமாக அறிந்த பின்னர்இந்த பானங்கள் , 2017 மே முதல் லக்ஜுரி கினைட்ஸ்பிரிட்ஜ் ஸ்டோர் ஹார்வி நிகோலஸ் மற்றும் டிசம்பர்2017 முதல் யூ.கே சூப்பர் மார்க்கெட் செயின்ஸ்பெரியிலும் விற்பனையில் கொடிகட்டி பறக்கின்றன. கருப்பு தேநீரின் தாக்கம், சுவையூட்டிகள், பால் மற்றும் சிறிது சர்க்கரையுடன் , 'டக் டக் சாயா' யூ.கே வின் நம்பத்தகுந்த ஒன்றாகி விட்டது.

அள்ளிய விருதுகள்

அக்டோபர்2017ல் நடைபெற்ற வர்த்தகக் கண்காட்சியில், இவர்களின் தேநீர் அதிக வாக்குகள் பெற்றுப் புதுமையான தயாரிப்பு என விருது பெற்றது. உணவுத்துறையில் உள்ள பெரும்பாலானோரால் ஒப்புக்கொள்ளப்பட்ட இது, இவர்களின் முக்கியச் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

வளர்ந்துவரும் பிராண்டு

கருப்பு தேநீரின் தாக்கம், சுவையூட்டிகள், பால் மற்றும் சிறிது சர்க்கரையுடன் கூடிய இந்தத் தேநீர் இவ்வளவு லாபகரமாக இருக்கும் என யாருக்கு தெரியும்? இன்று ரூபேஸின் இந்த டக்டக் சாயா நிறுவனத்தின் மதிப்பு 2.6மில்லியன் டாலர். இருந்தாலும் இந்த ஜோடி தங்களின் அன்றாடப் பணிகளைத் தாங்களே செய்து வருகின்றனர்.

குடும்பப் பொறுப்புகள்

ரூபேஷின் இந்த வெற்றி அவருக்கு மட்டும் பலனளிக்காமல், அவரின் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் சேர்ந்தே உதவியுள்ளது. ரூபேஷின் சகோதரர் ராகேஷ் இன்னும் இந்தியாவில் தான் வாழ்கிறார் மற்றும் ரூபேஷ் தனது சொந்த ஊரான கேரளாவில் சலவைத் தொழிலிலும் முதலீடு செய்துள்ளார்.

வெற்றியின் இரகசியம்

கோடீஸ்வரராக மாறுவதற்கு எந்த மாயாஜால மந்திரமும் இல்லை என்கிறார் ரூபேஷ். 'எனது வெற்றியில் அதிர்ஷ்டத்திற்கும் கூட எந்தப் பங்கும் இல்லை. அனைத்துக்கும் காரணம் கடின உழைப்பும்,மன உறுதியும் மட்டுமே. மேலும் வெற்றிக்கான உண்மையான பசியும், விட்டுதரக்கூடாது என மனப்பாங்கும் அதிகமாகவே உள்ளது' என்கிறார்.

நிதி நெடுக்கடிகள்

'எனது பயணம் எப்போதும் தடைகள் ஏதுமின்றி நேரான பாதையாக இருந்ததில்லை. எனது தொலைதொடர்பு நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு 6 மாதம் முன்பு, பொருளாதார ரீதியில் ஏராளமான சலால்களைச் சந்தித்தேன். வரவேற்பாளராகப் பணியாற்றிய எனது மனைவியின் வருமானத்தை வைத்து வாழ்ந்து வந்தோம். அப்போது எங்களின் வார உணவுக்கு வெறும் $26.50 முதல் $33 மட்டுமே இருந்தது என்கிறார் ரூபேஷ்

முதலில் வெற்றி பெறவில்லை எனில் தளர்ந்து விடாதீர்கள்

வளர்ந்துவரும் தொழில்முனைவோருக்கு என்ன அறிவுரை வழங்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, எந்தவொரு தோல்வியையும் போர்வடுவாக எடுத்து அணிந்துகொண்டு முன்னேறிச் செல்லுங்கள். அது தான் நீங்கள் கடினமாகச் சூழ்நிலைகளை எதிர்கொண்ட ஆதாரங்கள் மற்றும் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் உங்களின் தலையை அலங்கரிக்கும். உங்களின் அனைத்து கடின உழைப்பிற்கும் வெற்றி மட்டுமே சிறந்த பரிசு என்கிறார் ரூபேஷ்.

 

 

குடும்ப வாழ்க்கை

' இந்தப் பயணம் என்பது இன்னும் முடிந்துவிடவில்லை. ஆனால் இதுவரைக்கும் அதன் சிறந்து பகுதி எனது குடும்பம் தான். இவர்கள் என் அருகில் இருப்பது எனது அதிர்ஷ்டம்" என்ற ரூபேஷ், தனது மனைவி அலெக்ஸாண்டிரியா மற்றும் 7 வயது மகன் கியான் உடன் இன்னும் விம்பிள்டன்ல் வசித்து வருகிறார்.

Have a great day!
Read more...

English Summary

The incredible rags to riches story of the real life Slumdog Millionaire