இந்திய மக்களின் சராசரி வருமானம் ரூ.80,000.. மோடி ஆட்சியில் அட்டகாசம்..!

பிரதமர் மோடியின் 4 வருட ஆட்சியில் இந்தியாவின் தனிமனிதனின் சராசரி வருமானம் 79,882 ரூபாயாக உயர்ந்துள்ளது, இது கடந்த 4 ஆண்டுகளை விடவும் அதிகமாக உள்ளது. இந்தத் தகவலை நாடாளுமன்றத்தில் உள்ளது.

Advertisement

2011-12 முதல் 2014-15ஆம் நிதியாண்டு காலத்தில் 67,594 ரூபாயாக உள்ளது எனப் புள்ளியல் துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.

Advertisement

விஜய் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2013-14ஆம் நிதியாண்டில் தனிநபர் வருமானம் 4.6 சதவீதம் உயர்ந்து 68,572 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து 2014-15ஆம் ஆண்டில் 6.2 சதவீதம் உயர்ந்து 72,805 ரூபாயாகவும், 2015-16ஆம் ஆண்டில் 6.9 சதவீதம் உயர்ந்து 77,826 ரூபாயாகவும், 2016-17ஆம் ஆண்டில் 5.7 சதவீதம் உயர்ந்து 82,229 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதன் மூலம் 2011-12 முதல் 2014-15ஆம் நிதியாண்டு காலத்தில் சராசரியாகத் தனி நபர் வருமானம் 79,882 ரூபாயாக உள்ளது.

English Summary

Average per capita income in last 4 years higher at nearly Rs 80,000
Advertisement