பதஞ்சலியின் வெற்றிக்கு காரணமான அந்த 5 தயாரிப்புகள்..!

இந்தியாவின் மிகப் பெரிய எப்எம்சிஜி நிறுவனமாகப் பதஞ்சல் வளர்ந்து வருவதற்கு முக்கியக் காரணம் பாபா ராம்தேவ் என்பது மட்டும் இல்லாமல் அவர்களது சில தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்திய கிடைத்த வரவேற்பும் முக்கியக் காரணம் ஆகும்.

எனவே பதஞ்சலியின் வெற்றுக் காரணமாக அந்த 5 தயாரிப்புகள் குறித்து இங்குப் பார்க்கலாம்.

மாட்டு நெய்

பதஞ்சலி நிறுவனமான 1,467 கோடி ரூபாயினை மாட்டு நெய் தயாரிப்பின் கீழ் மட்டும் வருவாயாகப் பெற்றுள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் நெய் அமுல் நிறுவனத்திற்கு நேரடி போட்டியாக உள்ளது. ஆனாலும் இரண்டு நிறுவனங்களிடம் பல ஒப்பந்தங்களும் உள்ளது.

டான்ட் காந்தி டூத்பேஸ்ட்

பதஞ்சலி நிறுவனத்திற்கு டான்ட் காந்தி டூத்பேஸ்ட் மூலமாக மட்டும் ஆண்டுக்கு 840 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. டூத்பேஸ்ட் சந்தையில் 14 சதவீதத்தினைப் பதஞ்சலி பெற்றுள்ளது. கோல்கேட், டாபர் உள்ளிட்ட போட்டி டூத்பேஸ்ட் தயாரிப்புகளின் சந்தை எல்லாம் சரிந்து வருகின்றன.

ஆயூர்வேதிக் மருந்துகள்

பதஞ்சலி நிறுவனம் அதன் ஆயூர்வேதிக் மருந்துகள் பிரிவில் 870 கோடி ரூபாயினை வருவாயாகப் பெற்றுள்ளது. அதன் நேரடி போட்டியாளரான டாபர் இந்தியாவை விட நான்கு மடங்கு அதிகம்.

கேஷ்காந்தி ஷாம்ப்பு

பதஞ்சலியின் கேஷ்காந்தி ஷாம்ப்பு 825 கோடி ரூபாய் வருவாயினை ஈட்டியுள்ளது. இந்துஸ்தான யூனிலீவர் நிறுவனம் வசம் தான் இந்தியாவின் 45 சதவீத சந்தை உள்ளது.

சோப்

பதஞ்சலி நிறுவனத்தின் மூலிகை சோப்பு மூலம் மட்டும் 574 கோடி ரூபாய் வருவாயினைப் பெற்றுள்ளது. இந்துஸ்தான யூனிலீவரின் லைப்பாய் தான் இந்தியாவில் அதிகளவில் விற்பனையாக ஒரு சோப் என்பது குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

Baba Ramdev's Patanjali a mega business Success Products