மின் கட்டணத்தைக் குறைக்க நடுவண் அரசு முடிவு.. புதிய தொழில் கொள்கை விரைவில் அறிமுகம்!

தொழிற்துறையில் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டுப் போட்டி மனப்பான்மையைத் தூண்டக்கூடிய மத்திய அரசின் புதிய தொழிற்கொள்கையில் பல்வேறு சீர்திருத்தங்கள் இடம் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தொழில்கொள்கை ஊக்குவிப்புத்துறை இதற்கு இறுதி வடிவம் கொடுக்கும் நடவடிக்கை முடிந்தவுடன், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக 2 வாரகாலத்தில் அனுப்பி வைக்கப்படுகிறது. அதில் இடம்பெற்றுள்ள முக்கியமான தகவல்கள் குட் ரிட்டன் தளத்துக்குக் கசிந்துள்ளன.

3 முக்கிய அம்சங்கள்

மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தத் தொழிற்கொள்கை, போட்டி மனப்பான்மை, ஸ்திரத்தன்மை மற்றும் இணைப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது

மாற்றத்தை நோக்கி

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா 29 சதவீதமாக உள்ளது. இது சீனாவைவிட 44 சதவீதம் குறைவானதாகும். இதனை அதிகப்படுத்தும் சீர்திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன. விரைவில் வெளியாக உள்ள புதிய தொழில்கொள்கை 30 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என மத்திய அரசு நம்புகிறது.

குறைகிறது மின்கட்டணம்

வீடுகள் மற்றும் வேளாண்துறைக்கு வழங்கும் மானிய முறையிலான மின்சக்தி கட்டணங்களை நேரடி பரிமாற்றத்துக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. தொழிற்சாலைகளிடம் வசூலிக்கப்படும் கட்டணம் இதனை விட அதிகமாக இருப்பதால், மின்கட்டணத்தைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கத் தொழில்கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேன் இன் இந்தியாவுக்கும் ஊக்கம்

மேக் இன் இந்தியா மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியாவைப் பிரபலப்படுத்தும் வகையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டுத் தொழில் கொள்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இது காலப் போக்கில் பிரச்சினைகளை உருவாக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

கண்காணிக்கக் குழு

மத்திய-மாநில அரசுகள் விரைவான நடவடிக்கை எடுக்க உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் நடவடிக்கையைக் கண்காணிக்கத் தொழில்துறை அமைச்சர் தலைமையில்,மாநில தொழில் அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழு ஒன்றை அமைக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

ஆராய்ச்சிக்கு யோசனை

கல்வி நிறுவனங்கள் மற்றும் வர்த்தகத்துறையில் ஒரு ஒன்று கூடலை ஏற்படுத்தி விவாதிப்பதன் மூலம், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் மாறுதல்களை உருவாக்கலாம் என்றும் தொழில்கொள்கையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Government to wheel in a new industrial policy soon