கருணாநிதி தமிழ் நாட்டுக்கு என்ன செய்தார் என்று கேட்பவர்களுக்கான பதில் இது தான்..!

ஊடும் பாவுமாகக் கூட அடிப்படை வசதிகள் உள்நுழையாத ஒரு சிற்றூரில், பிற்படுத்தப்பட்ட நலிந்த குடும்பத்தில் பிறந்த கருணாநிதி என்ற கலைஞர், தமிழகத்தில் நிலவிய சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு களைய அரும்பாடுபட்டார். அவரது வளப்பமான வாழ்வு குறித்துச் சில சங்கடமான விமர்சனங்கள் இருந்தாலும், சமூகப்பணி அவரை முன் நகர்த்திக் கொண்டே சென்றது.

கலைஞர் ஒரு வானளாவிய உயரம்

தமிழக அரசியலில் வானளாவிய உயரங்களைக் கடந்த அந்தத் திராவிட இயக்கத்தின் கடைசி வாரிசை, 94 ஆம் வயதில் இருக்க அவகாசம் கொடுக்காமல் எமன் எடுத்துக் கொண்டான். திராவிட முன்னேற்றக்கழகத்தின் அசைக்க முடியாத தலைவராக இருந்த கருணாநிதி, போட்டியிட்ட 13 தேர்தல்களிலும் தோல்வியைக் கண்டதில்லை. இது அவரது சமூகப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு மக்கள் கொடுத்த மாபெரும் பரிசளிப்பு.

உதிரத்தை விலையாகக் கொடுத்த கலைஞர்

தமிழக மக்களைக் காலுக்குக் கீழே மிதித்துக் கொண்டிருந்த சமூகப் பொருளாதா பிரச்சினைகளுக்குத் தீரவு காண தன் வாழ்நாளை தத்தம் செய்தார். ஏழைகளைக் காவு வாங்கிக் கொண்டிருந்த ஏழ்மை, சமூகச் சமத்துவமின்மையை விரட்ட தன் உழைப்பையும், உதிரத்தையும் விலையாகக் கொடுத்தார்.

அஞ்சுகத்தின் மகன் அரசியல்வாதியானார்

1924 ஆம் ஆண்டுத் தஞ்சை மாவட்டம் திருக்குவளையில் அஞ்சுகத்தாய் என்ற பெண்ணின் வயிற்றைப் பிளந்து வெளியேறிய கருணாநிதி, பிற்காலத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்தார். 1938 ஆம் ஆண்டு 14 வயது பாலிய வயதில் அரசியலுக்குள் நுழைந்த அவர், 57 ஆம் ஆண்டு முதன் முறையாகத் தமிழகச் சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.

எதிர்ப்பை சம்பாதித்த எரிமலை

சமூகப் பொருளாதாரச் சிந்தனையுடன் அவரது வசனத்தில் உருவான பராசக்தி 52 ஆம் ஆண்டுத் திரைக்கு வந்தது. அப்போது உயர்சாதி இந்துக்களின் எதிர்ப்பு அவரைப் போருக்கு அழைத்தது.

சமூகச் சமத்துவப் பார்வை

திரைப்படங்களில் வசனகர்த்தாவாக வெளிப்படுத்திய சமூகப் பொருளாதா சிந்தனை அரசியல் பணியில் திட்டங்களாகச் சமைத்தார். நலவாழ்வு காப்பீட்டுத் திட்டம் தொடங்கிப் பேருந்தை அரசுடையாக்கியது வரை அதன் பிரதிபலிப்பு இருந்தது. தி.மு.கவுக்குச் சிறப்புச் சேர்த்த திட்டங்கள் அ.தி.மு.க ஆட்சியில் கைவிடப்பட்டன.

அவர் ஒரு முன் உதாரணம்

அறிஞருக்குப் பிறகு அரியணையைப் பிடித்த கலைஞர் சமூகப் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். பேருந்து போக்குவரத்தை மேம்படுத்தி அதனை நாட்டுக்கே முன்னுதாரமாகக் காட்டினார்.

இலவச வீடு, நலவாழ்வுத் திட்டங்கள்

தமிழக ஆட்சி மீண்டும் கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏழைகளுக்கு உதவும் நலவாழ்வுத் திட்டங்கள் அறிமுகமாகின. வீடு, மானிய விலை அரிசி, சர்க்கரை, மண்ணெய் எனப் பொருள் வழங்கல் துறையில் வழங்கப்பட்ட சலுகைகளை ஏழைகளின் வீடுகளுக்குப் போய்ச் சேர்ந்தன. பொங்கல் திருநாளில் ஏழைகளுக்கு இலவச வேட்டியையும், சேலையையும் கட்டிவிட்டு அழகுபார்த்தவர் முத்துவேலர் கருணாநிதி.

கர்ப்பிணிகளுக்கு உதவி

ஆட்சியின் கடைசிக் காலகட்டத்தில் கொண்டு வரப்பட்ட நலமான தமிழகம், ஏழைகளின் உடல்பிணியைத் தீர்த்தது.கர்ப்பிணி பெண்களுக்குப் பராமரிப்பு செலவுக்காக முதலில் 6000 கோடி ரூபாயை ஒதுக்கினார் கருணாநிதி. பின்னர் அதனை 12000 கோடியாக உயர்த்தினார்.

அமைப்புசாரா தொழில்களுக்கு அதிகாரம்

அமைப்புசாரா தொழில்கள் கருணாநிதி ஆட்சியில் வளர்ச்சியை எட்டின. ஒழுங்குபடுத்தப்படாத துறைகளில் பணிபுரிந்த தொழிலாளர்களை முன்னுக்குக் கொண்டுவர திட்டங்கள் தீட்டப்பட்டன. மாற்றுத் திறனாளிகளுக்கும், வேலையின்றிப் போன தனிநபர்களும் நிதி உதவு செய்யப்பட்டன.

கருணாநிதி சிந்தித்த உழவர் சந்தை

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க உழவர் சந்தை திட்டத்தை முன்வைத்தார். உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய அரசே உள்கட்டமைப்பைச் செய்து கொடுத்தது.97-38 ஆம் ஆண்டுகளில் கிராமப்புறங்கள் தன்னாட்சி பெற திட்டங்களைக் கலைஞர் தீட்டினார்.

வெற்றிகரமான தமிழகம்

குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எடடிய தமிழகம், வெற்றிகரமான மாநிலங்களின் பட்டியலில் இடம் பெற்றது. வறுமையை விரட்டுவதற்காக நடைமுறைப்படுத்திய திட்டங்கள் இதற்கு உதவின.

கலைஞரின் அளப்பரிய சாதனை

சமூக நலத்திட்டங்களைக் கொண்டு வந்தது நாங்கள் தான் என அ.தி.மு.க உரிமை கொண்டாடலாம். அதற்கெல்லாம் முன்னோடியாக ஏழைகளுக்கு நெருக்கமான திட்டங்களை நடைமுறைப்படுத்தியது தி.மு.க அரசு தான். மணி மகுடங்களை மலர்ச்செண்டுகளாக்கி விளையாண்ட கருணாநிதியின் இந்தச் சாதனைகள், அவரைப் போலவே இந்திய வரலாற்றில் ஒரு நீங்காத இடம் பிடிக்கும்.

Have a great day!
Read more...

English Summary

How Karunanidhi's socio economic approach benefited the poor, underprivileged and marginalised