திறமை இருந்தால் ஐடி ஊழியர்களுக்கு இப்போ ஜாக்பாட் தான்..!

இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது அமெரிக்க வர்த்தகச் சந்தை, புதிய தொழில்நுட்பம், வர்த்தகத்தில் சரிவு எனப் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருக்கும் ஐடி ஊழியர்கள் எண்ணிக்கை அதிகளவில் வெளியேறி வருகின்றனர்.

புதிய பிரச்சனை

இந்திய ஐடி நிறுவனங்கள் தற்போது பன்னாட்டு நிறுவனங்களைப் போல் டிஜிட்டல் மற்றும் அனலிட்டிக்ஸ் துறையில் வர்த்தகம் தேடி வருகிறது. மறுபுறம் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தனது ஊழியர்கள் எண்ணிக்கை விரிவாக்கம் செய்து வருகிறது. இதனால் இந்திய ஐடி நிறுவனங்களுக்குக் கிடைக்கும் வர்த்தகம் பாதிக்கும்.

 

 

அதிகளவிலான பாதிப்பு

இந்நிலையில் இந்திய ஐடி நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் அதிகளவில் வெளியேறி வருகின்றனர். இது இன்போசிஸ், சிடிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய நிறுவனங்கள்

ஜூன் காலாண்டில் இன்போசிஸ், காக்னிசென்ட் நிறுவனங்களில் ஊழியர்கள் வெளியேறும் அளவு 20 சதவீதமாக உள்ளது. இது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 5இல் 1 பங்கு ஊழியர்களைப் பாதிக்கும். இது இந்நிறுவன வர்த்தகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

இதேபோல் விப்ரோ-வின் வெளியேறும் எண்ணிக்கை 17 சதவீதமாகவும், டிசிஎஸ் நிறுவனத்தில் 10.9 சதவீதமாக உள்ளது.

 

முக்கியத் தேவை

இன்போசிஸ், காக்னிசென்ட் மற்றும் விப்ரோ நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகளவில் குறைந்து வரும் நிலையில் இந்நிறுவனங்களில் தற்போது திறன் வாய்ந்த ஊழியர்கள் அதிகளவில் தேவைப்படுகின்றனர்.

மேலும் காக்னிசென்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 22 சதவீதமாக உள்ளது.

 

இந்திய ஐடி நிறுவனங்களின் நிலை

பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையாக இந்திய நிறுவனங்கள் வர்த்தகத்தைத் தேடி வரும் நிலையில் திறன் வாய்ந்த ஊழியர்களும் அதிகம் தேவை.

இந்நிலையில் ஊழியர்களைத் தக்கவைத்து ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

 

 

ஜாக்பாட்

ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ள நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஊழியர்களுக்கு அதிகப்படியான அல்லது பிற நிறுவனங்கள் அளிக்கும் சம்பளத்திற்கு இணையான ஒரு சம்பளத்தை அளிக்க ஐடி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

இதுமட்டும் அல்லாமல் ஊழியர்களுக்குப் பதவி உயர்வும் அளிக்கவும் தயாராக உள்ளது. இதை ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் என்று சொல்லாமல் எப்படிச் சொல்வது.

 

Read more about: it infosys cognizant tcs

Have a great day!
Read more...

English Summary

IT firms look to stop employees with promotions, better hike