ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க மோடி அரசு எடுத்துள்ள புதிய தந்திரம்!

ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாமல் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு, பிணையெடுப்பு மூலம் 11 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவது குறித்த மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

தனியார்மயமாக்குவதில் தோல்வி

தனியார் மயமாக்கும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்துவதற்காகவும், மூலதனக் கடன்களைக் குறைக்கும் நோக்கத்துடனும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், நிதித்துறை அமைச்சகத்திடம் இந்தப் பிணையெடுப்பு கோரிக்கையை விடுத்துள்ளது.

மீண்டும் ஒரு தந்திரம்

இபருப்பு நிலையை அதிகரித்து முதலீடுகளைக் கவர்வதன் மூலம், ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார்மயமாக்கும் தந்திரத்தை மீண்டும் கையாள உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விமானப்போக்குவரத்துத் துறை செயலாளர் சௌபே கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

ரூ.48,000 கடன்

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் 48,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமையில் சிக்கியிருந்தது.தொடர்ந்து 5 மாதங்களாகச் சம்பளமே வழங்க முடியாத நிலை உருவானதால், 980 கோடி ரூபாயை ஏர் இந்தியா நிறுவனத்துக்கு வழங்க கடந்த மாதம் முடிவு செய்யப்பட்டது

ரூ.650 கோடி உதவி

நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஜூன் மாதம் ஏர் இந்தியா நிறுவனம் 650 கோடி ரூபாயைப் பெற்றது, இதற்கான மறு சீமைப்புத் திட்டம் 2012 ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பங்கு முதலீடுகளை உத்தரவாதக் கடன்களாக அரசு வழங்கி வருகிறது

கடன் வழங்குவதில் சலுகை

ஏர் இந்தியா நிறுவனத்தின் நிதிச்சிக்கலை சமாளிக்கக் குறைந்த வட்டியில் மூலதன கடன்கள் நீண்டகால அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதுவரை 27,195 கோடி ரூபாய் ஈக்விட்டி கடனாக வழங்கப்பட்டதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறினார்.

Have a great day!
Read more...

English Summary

modi's plan to make air india as privatization