அரசுக்கு 50,000 கோடி ரூபாய் டிவிடண்ட் அளிக்கும் ரிசர்வ் வங்கி!

இந்திய ரிசர்வ் வங்கி புதன் கிழமை மத்திய அரசுக்கு 2018 ஜூன் 18ம் தேதியுடன் முடிந்த நிதி ஆண்டின் டிவிடண்ட் ஆக 50,000 கோடி ரூபாயினை அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஆர்பிஐ இந்த முடிவினை போர்ர்டு உறுப்பினர்கள் இடையிலான கூட்டத்தில் எடுத்துள்ளது.

மத்திய வங்கி

மத்திய வங்கி இயக்குநர்களுக்கு இடையிலான ஆர்பிஐ கூட்டம் 2018 ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெற்ற நிலையில் 2018 ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டின் உபரியாக 500 மில்லியன் ரூபாயினை அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஜூன் நிதி ஆண்டு

இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை - ஜூன் நிதி ஆண்டினை கடைப்பிடிப்பது குறிப்பிடத்தக்கது.

2017 மற்றும் 2016

சென்ற ஆண்டு 2017 ஜூன் வரையிலான நிதி ஆண்டில் ஆர்பிஐ வங்கி மத்திய அரசுக்கு 30,659 கோடி ரூபாயினை டிவிடண்ட்டாக அளித்தது. ஆனால் அதற்கு முந்தைய 2016-ம் ஆண்டில் 65,576 கோடி ரூபாயினை உபரியாக அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

இடைக்கால டிவிடண்ட்

2017-2018 நிதி ஆண்டின் துவக்கத்தில் மத்திய வங்கி 10,000 கோடி ரூபாயினை இடைக்கால டிவிடண்ட் ஆக அளித்தது இருந்தது.

2017-ம் ஆண்டு டிவிடண்ட் சரிய காரணம் என்ன?

2017-ம் ஆண்டு டிவிடண்ட் தொகை குறைந்ததற்குப் பண மதிப்பு நீக்கக் காலத்தில் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணிக்காக அதிகளவில் செலவு செய்யப்பட்டதே காரணம் ஆகும்.

Have a great day!
Read more...

English Summary

RBI To Pay Rs 50,000 Crore Surplus Dividend to Government for FY 2017 to 2018