சுதந்திர தின சிறப்பு விற்பனையில் சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு ரூ.31,600 தள்ளுபடி.. அமேசான் அதிரடி!

சுதந்திர தின சிறப்புத்தள்ளுபடி விற்பனை சூடுபிடித்துள்ள நிலையில், 55,900 ரூபாய் மதிப்புள்ள சாம்சங் கேலக்சி நோட்-8 ஸ்மார்ட்போனுக்கு 31,600 ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படும் என, அமேசான் நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சலுகை மழை

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர விழா கொண்டாடப்படவுள்ள நிலையில், சலுகை விலை விற்பனையை அமேசான் நிறுவனம் தொடங்கியுள்ளது. ஸ்மார்ட் போன்கள், மின்னணு பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை அதிரடி விலை சலுகைகளை வழங்கியுள்ளது

ரூ.31,600 தள்ளுபடி

சாம்சங் கேலக்சி நோட்-8 ஸ்மார்ட் போனுக்கு 31,600 ரூபாய் வரை தள்ளுபடி அளித்துள்ளது. எக்சேஞ்சுக்கு 17,600 ரூபாய் வரை வலுகை வழங்கியுள்ளது. எக்சேஞ்சுக்கான பொருளின் தன்மையைப் பொறுத்து இந்த சலுகை அளிக்கப்படுகிறது. எச்.டி.எப்.சி கிரீடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 4000 ரூபாய் கேஷ்பேக்கும் இதுதவிர ரூபாய் எக்சேஞ்ச் கழிவும் வழங்கப்படுகிறது.

கேஷ்பேக்

பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட கார்டுகளுக்கு நோ காஸ்ட் இ.எம்.ஐ அளிக்க முடிவு செய்துள்ளது. பிம், யு.பி.ஐ மூலம் பணம் செலுத்துவோருக்கு 10 சதவீதம் வரை கேஷ்பேக் அளிக்க அமேசான் முன் வந்துள்ளது. இது பொருட்களை வாங்கியதில் இருந்து 15 நாட்களில் வழங்கப்படும்

சாம்சங் சிறப்பு

சாம்சங் கேலக்சி நோட் 8, 64 ஜி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் 6 ஜி.பி ரேம் கொண்டது. மெகா பிக்சல் கேமரா மற்றும் ஆக்டா கோர் புரசஸர்களும் உள்ளது.

Have a great day!
Read more...

English Summary

Amazon’s ‘The Freedom Sale’ Up To Rs 31600 Offer on Samsung Galaxy Note 8