ஜூன் மாதம் தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி 7% ஆக உயர்வு..!

ஜூன் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 7 சதவீதம் உயர்ந்துள்ளதாக அரசு தரவுகள் கூறுகின்றன. தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி அல்லது தொழிற்சாலை செயல்பாடு வளர்ச்சி என்பது தொழிற்சாலையின் உற்பத்தியினைப் பொறுத்தது ஆகும். இதுவே மே மாத தொழில்துறை வளர்ச்சியானது 3.2 சதவீதமாகச் சரிந்து இருந்தது.

காலாண்டு சராசரி

2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டு சராசரி தொழில் துறை வளர்ச்சியானது 5.2 சதவீதமாக உள்ளது என்று புள்ளியியல் அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உற்பத்தி குழு

இந்தியாவில் உள்ள 23 தொழில்துறை குழுவில் 19 உற்பத்தித் துறைகள் ஜூன் மாத ஆண்டு வளர்ச்சியினைப் பெற்றுள்ளன.

அதிக வளர்ச்சி அளித்த முக்கியத் துறைகள்

கணினி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆப்டிக்கல் பொருட்கள் அதிகபட்சமாக 44.1 சதவீத வளர்ச்சியினைப் பெற்றுள்ளன. அதற்கு அடுத்தபடியாக மோடார் வாகன உற்பத்தி, வணிக வாகனங்கள் துறையும் அதிக வளர்ச்சியினைப் பெற்றுள்ளன.

Have a great day!
Read more...

English Summary

Industrial Production Growth At 7% In June