காலாண்டு அறிக்கை தேதியை தள்ளி வைத்ததால் 14 சதவீதம் வரை ஜெட் ஏர்வேஸ் பங்குகள் சரிவு!

இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கடந்த சில வாரங்களாக ஊழியர்கள் சம்பளம் குறைப்பு, கடன் அதிகரிப்பு போன்ற சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில் வெள்ளிக்கிழமை 2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டு அறிக்கையினை வெளியிடுவதை ஒத்தி வைத்ததை எடுத்துப் பங்குகள் விலை 14.5 சதவீதம் வரை இன்று சரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

ஜெட் ஏர்வேஸ் நிறுவன தலைவர்கள் 2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டு அறிக்கையினைப் பார்த்து அதிருப்தி அடைந்த நிலையில் போர்டு இயக்குநர்கள் அறிவிப்புத் தேதியினை ஒத்தி வைத்துள்ளனர்.

Advertisement

பிற்பகல் 3:10 மணியளவில் 25.35 புள்ளிகள் என 8.22 சதவீதம் சரிந்து 276.90 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு நட்டம் ஏற்படுத்தி இருப்பது வருத்தத்தினை அளித்துள்ளதாக வியாழக்கிழமை நரேஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 12ம் தேதி வரை ஜெட் ஏர்வேஸின் பங்குகள் 12 சதவீதம் வரை சரிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

English Summary

Jet Airways shares plunge over 14% after airline defers Q1 results
Advertisement